சீனப்புத்தாண்டுகேக்/Tradition Cake Nian Gao

   எங்கள் வீட்டில் எந்த மதம் என்றாலும் அவர்கள் அந்த நாட்களில் என்ன செய்கிறார்களோ அந்த சாப்பாடு செய்து கொடுத்து விடுவேன். 
அதே மாதிரி தான் இதுவும். சாப்பாடு மட்டும் இல்லை அவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கதையும் சொல்லிகொடுப்பேன்.எல்லாமே எனக்கு தெரிந்த வரைத்தான். 
 இந்த கேக் பிறந்த கதை: என் பெரிய பெண்,அதனுடன் படிக்கும் ஆசிய நாட்டு நண்பர்கள் இந்த கேக் பற்றி கூறினார்களாம்.அதனால்,என் பெரிய பெண் இந்த கேக் செய்ய சொன்னது. செய்தேன்.
   உங்களுடனும் பகிர்ந்துக்கொள்கிறேன்.

தேவையான பொருள்:
  • *அரிசி மாவு 400 கிராம் (Glutinous Rice flour)
  • பேகிங் பவுடர்டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் 400 மில்லி  21/2 கப்
  • முட்டை 3 - 4
  • சமையல் எண்ணெய் 150 மில்லி 1/2கப்
  • சர்க்கரை  200 - 250 கிராம் 1 கப்

*கொழக்கொழப்பாய்அரிசி மாவில் செய்யப்பட்டது .சீனர் கடையில் கிடைகிறது


செய்வது எப்படி ?

1)அவணை முற்சூடு 200° செய்யவும்
2)முட்டையும்,எண்ணெய்யும் நன்றாக அடித்துக்கொள்ளவும்.
3)பிறகு தேங்காய் பாலையும்  ஊற்றி அடித்துக்கொள்ளவும்.

4)அரிசி மாவு பேகிங்பவுடர், எல்லாவற்றையும் அடித்த முட்டையில் போட்டு நன்றாக கலக்கவும்.




5)கலந்து உங்களுக்கு பிடித்த எஸன்ஸ் ஊற்றி அவணில் 30 நிமிடங்கள் வைக்கவும்.அவண் 200° யிலேயே இருக்கட்டும்.





இது மாவு தண்ணீராகத்தான் இருக்கும்.வெந்தவுடன் சரியாகிவிடும்.






copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts