தாய்மை அனுபம் 14

     4 லிருந்து 8 மாதம் வரை குழந்தைகள் நிறைய செய்ய ஆசைப்படும். இசையை கேட்க,குப்புற படுக்க,குப்புற படுத்துக்கொண்டே 
நகர, நாலு காலில் நடக்க. நம்மை பார்த்து சத்தமாக சிரிக்க.
 இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம் .
இப்பொழுது ஒன்று மட்டும் சொல்லுகிறேன். பிள்ளைகளை நடக்க 
வற்புற்த வேண்டாம். இப்பொழுது குழந்தையை உட்கார வைத்து சக்கரம் வைத்து விற்கும் விளையாட்டை,குழந்தைகளுக்கு 10 மாததில் வாங்கி கொடுங்கள். சீக்கிரமாக வாங்கி கொடுத்தால் சீக்கிரமாக நடந்து விடுவார்கள். அது காலுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. பிறகு, உங்கள் இஷ்டம்
பிள்ளைகள் தூங்கும் போது மென்மையான இசையை போட்டு தூங்க செய்யுங்கள். விளையாடிக்கொண்டே இசையை கேட்டுக் கொண்டே தூங்கட்டும்.

   வீட்டில் உள்ள ஆபத்தான பொருள்களை எல்லாம் அப்புறப்படுத்தி விடுங்கள்.
குழந்தை தூங்கும் கட்டிலில் உள்ள போர்வை மிகவும் பெரியதாக போட வேண்டாம். அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள். முகத்தில் போட்டுக்கொள்ளலாமல்.

தனியாக தண்ணீர் இருக்கும் இடத்தில் விடவேண்டாம்.
மருந்து மாத்திரைகளை கீழே  போட்டு வைக்காதீர்கள்.
குளிர் நாட்டுகளில் இருப்பவர்கள் heater/chauffage பக்கம் போகமால் இருக்க ஏதாவது செய்து வைக்கவும். இல்லையென்றால், சுட்டு விடும்.
எலக்டிரிக் பொருட்களை தரையில் போட்டு வைக்க வேண்டாம்.ஆபத்தில் முடியும்.
அடுப்பாங்காரை பக்கம் குழந்தை வராமல் இருக்க ஏதாவது தடுப்பு வைக்கவும்.
இருப்பதிலேயே ஆபத்தானா இடம்  அடுப்பாங்கரைத்தான்.
ஆறு மாததில் இருந்து துணியால் ஆன புத்தகம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.
ஒரு சில புத்தகங்களை கொடுத்து பழகலாம். ஆனால் நாம் பக்கத்திலேயே இருக்க வேண்டும். துணி புத்தகம் என்றால் கொஞ்சம் பரவாய் இல்லை.
 4மாததிலிருந்துதான் விரல் சப்பும் பழக்கம் வரும்.
ஆறு மாததில் பல் வருவதால்எல்லாவற்றையும் கடிக்கும். அதனால்,நாமும் பத்திரமாக இருக்க வேண்டும்.நாமும் கடி வாங்குவோம்.


சில பிள்ளைகளுக்கு 1 வயதில் கூட பல்  வரும்அவர்களுக்கு மண்டை றுதியாக இருக்கிறது என்று சொல்லுவார்கள்அவ்வாறே லேட்டாக பல் விழும். அதற்காக பயம் வேண்டாம்.
பல் வந்ததும் பல் கஞ்சி செய்து கொடுப்பது நம் நாட்டு  பழக்கம். செய்துக்கொடுங்கள்.
குழந்தை கொஞ்சம் சத்தங்களும் செய்ய ஆரம்பிக்கும்.
இப்படியாக குழந்தைகள் நம்மை  4 மாதத்திலிருந்து  புது உலகதிற்கு அழைத்து செல்வார்கள். பார்க்கும் நமக்கு இனிமையாக இருக்கும்.

6 மாத குழதை உணவு முறை
காலை 7 மணி: பால் 180 - 240 மில்லி

9 மணி :குளியல்  80 மில்லி காய்கறி ஜுஸ் அல்லது பழஜுஸ்.

12 - 13 மணி  :காய்கறி 80கிராம் - 120 கிராம்  150  லிருந்து 200 மில்லி பால் கொடுக்கலாம்.

16 மணி :பிஸ்கெட்,80கிராம்  பழக்கோம்போத் walking

8 மணி :180- 240 மில்லி பால் அல்லது காய்கறி ப்யூரே பாலில் கலந்து 180 மில்லி பாலில் கலந்து கொடுத்து விடுங்கள்




copyright©kolly2wood.blogspot.com 


Comments

Popular Posts