தாய்மை அனுபம் 12


நான் எழுதும் எல்லாம் பொதுவாகத்தான் எழுதுகிறேன். நீங்கள் எதுவாக இருந்தாலும் டாக்டரின் உதவிக்கொண்டு செய்யவும். ஏன் என்றால் பிள்ளைக்கு பிள்ளை எதுவாய் இருந்தாலும் மாறுப்படும்.

     3 மாதம் முடிந்து 4வது மாதம் பிள்ளையிடம் மாற்றங்கள் வரும் நேரம்.
நம்மை பார்க்க ஆரம்பிக்கும். பல ஒலிகள் உணர ஆரம்பிக்கும்.
     குழந்தைக்களுக்கு ஒழுக்காக பார்வை வருவது 10 வயதில் தான்
அது வரை கொஞ்சம் கொஞ்சமாகதான் பார்வை வர ஆரம்பிக்கும்.
அதனால்தான், 10 வயது வரை பிள்ளைகளை தனியாக பள்ளிக்கு 
அனுப்ப வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். மீண்டும் இதனைப்பற்றி சொல்லுகிறேன்.
    இப்படி பல உடல் வளர்ச்சி,மூளை வளர்ச்சி எல்லா வளர்ச்சியும் பெருகும்போது உணவை மட்டும் நாம் மாற்றாமல் வெறும் பாலையே கொடுத்துக்கொண்டு இருந்தால்,பிள்ளைக்கு வரவேண்டிய வளர்ச்சி,வைட்டமின்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விடும்.
அதனால், குழந்தைக்கு பாலும் தேவை, ஊட்ட சத்துள்ள உணவும் தேவை.

    3 மாதம் முடிந்து  4 வது மாதம் தொடக்கதில் நான் பிள்ளைகள் வளர்த்த காலத்தில் உணவு மாற்றம் வந்தது. இப்பொழுது நிறைய 
ஒவ்வாமை/ allergie இருப்பதால் இப்பொழுது 6 மாதத்திலிருந்து மாற்றம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

     உணவு முறை மாற்றத்தை டாக்டரைக்கேட்டு முடிவு செய்யுங்கள்
அது உங்கள் இஷ்டம்.
 உணவுக் கொடுக்கும் போது ஒவ்வொன்றாக கொடுக்கவும்அது கொடுத்ததும்அது பிள்ளைக்கு ஒத்துக்கொள்கிறதா என்று பார்த்து பார்த்து கொடுக்க வேண்டும்.     
     எடுத்து காட்டாக, 5ஆம் மாதம் உணவு மாற்றம் கொண்டு 
வரப்போவதாக வைத்துக்கொள்வோம்.
                                                                                                                                                   
     4 காவது மாத கடைசி மாதத்திலிருந்து மாற்றம் கொண்டு வரவேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், காலையில் ஒரு முறை கொடுக்கவும்.
தலைக்கு ஊற்றிய பின் 150 மில்லி வேக வைத்த காய்கறி தண்ணீர் ஊற்றிக் கொடுக்கவும்
காய்கறி தண்ணீர் தயாரிக்கும் முறை:

    ஒரு கசரோலில்கேரட் வெட்டி போடவும். 2 கப் தண்ணீர் ஊற்றவும். நன்றாக வேக வைக்கவும். கேரட் நன்றாக வெந்ததும்,கேரட் வெந்த 
தண்ணீரை வடிக்கட்டவும்.

    தயவு செய்து குக்கரில் வேகவைக்க வேண்டாம். உப்பு,சர்க்கரை எதுவும் போடவேண்டாம்.

     வேக வைத்த தண்ணீரை வடிக்கட்டி பால் பாட்டிலில் ஊற்றிக்கொடுக்கவும்

     முதலில் கேரட் தண்ணீர் 2,3 நாளைக்கு கொடுங்கள். அது உடம்புக்கு ஒத்து வருக்கிறதா? என்று பார்க்கவும்.பிறகு, அதுப்போலவே, உருளைக்கிழங்கு வேகவைத்து, அதன் தண்ணீரை கொடுக்கவும். 

உருளைக்கிழங்கு தண்ணீர் 2,3 நாளைக்கு கொடுங்கள்
அதுவும் ஒத்து வந்தால்,இரண்டும் வேவைத்து கலந்து கொடுத்து பார்க்கலாம்.

     தாய்ப்பால் கொடுக்கவில்லை, பவுடர் பால் என்றால், டாக்டரிடம் கேட்டு  பவுடர் பாலில் எந்த மாவு கலந்து தரவேண்டும் என்று
 (செர்லாக் போன்ற) கேட்டு கலந்து கொடுங்கள். இதை 4 மாததிலிருந்து கொடுகலாமா? 5மாததிலிருந்து கொடுக்கலாமா? என்று டாக்டரிடம் கேட்டு கொடுங்கள்.     

                  4 அல்லது 5 மாததிலிருந்து

6.30 a.m தாய்ப்பால்/ பவுடர் பால் மாவு கலந்தது.-தூக்கம் 
9 a.m குளியல் - தாய்ப்பால்/பால்-தூக்கம் 
12 தாய்ப்பால்/பால்-தூக்கம் 
16 p.m தாய்ப்பால்/பால் - walking
20 p.m தாய்ப்பால்/ பவுடர் பால் மாவு கலந்தது.-தூக்கம் 



           
                  4 அல்லது 5 மாத கடைசியில்


7 a.m தாய்ப்பால்/ பவுடர் பால் மாவு கலந்தது-தூக்கம் 
10 a.m குளியல்-காய்கறி தண்ணீர்150ml-தூக்கம் 
12 தாய்ப்பால்/பால்-தூக்கம் 
16 p.m தாய்ப்பால்/பால் - walking
20 p.m தாய்ப்பால்/ பவுடர் பால் மாவு கலந்தது-தூக்கம் 


இன்னும் எழுதுவேன் 

copy©Feb2014 Kolly2wood.blogspot.com   

Comments

Popular Posts