டபுள் சாக்லெட் வால்நட் குக்கீஸ்/ Double chocolate and walnut cookies

இதுல ஓட்ஸ், வால்நட் எல்லாம் இருப்பதால் சத்தாணா குக்கீஸ் என்றும் சொல்லலாம். 

வேண்டிய பொருள்:

பவுல் 1
  • மைதா 150 கிராம்
  • ஓட்ஸ் 100 கிராம் அரைத்தது
  • சோடா மாவு 1/4 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் 1/4 டீஸ்பூன்
  • முந்திரி பருப்பு அல்லது வால்நட் 30 கிராம்
  •  மில்க் சாக்லெட் 50 கிராம்
  • டார்க் சாக்லெட் 100 கிராம்



பவுல் 2
  • வெண்ணெய்  115 கிராம் ரூம் டெம்பரேச்சர்
  • சர்க்கரை 100 கிராம்
  • சர்க்கரை 100 கிராம் (Brown sugar/sucre brun )
  • முட்டை 1
  • வனிலா எஸன்ஸ் 1 டீஸ்பூன்



செய்ய வேண்டியவை:

1)சாக்லெட்டை கத்தியால் சின்ன சின்னதாக உடைத்துக்கொள்ளுங்கள்.

2)பவுல் 2- முட்டை,வெண்ணெய்,சர்க்கரையை கொஞ்சமாக அடித்துக்கொள்ளுங்கள் .




3)பருப்பு வகையை உடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
4)பவுல் 1 ல் உள்ளதை நன்றாக கலக்கவும். கூடவே சாக்லெட்களையும் போடவும். நன்றாக கலக்கவும்.
5)பவுல் 1 யும் பவுல் 2ல் உள்ளதையும் ஒன்றாக ஆக்கவும். நீங்கள் உங்கள் கையால் பிசைந்தாலும் சரி. அதற்காகவுள்ள மிக்ஸரில் பிசைந்தாலும் சரி. நன்றாக ஒருசேர கலக்க வேண்டும். அவ்வளவுத்தான்.

பிசைந்த மாவு ரெடியா இருக்கா?
அவணை முற்சூடு பண்ணவேண்டாமா? பண்ணுங்கோ  200°

6)அவணில் வைக்கும் தட்டில் பட்டர் பேப்பர் போட்டு, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இடைவெளி விட்டு வைக்கவும்.


அவணில் வேகும் போது தானாகவே அது குக்கீ  shape/ஸ்யேப்பிற்கு வந்துவிடும்.
7)அவணில்190° ல் 10 நிமிடம் வைத்து எடுத்தால் போதும்

5 நிமிடமாவது கழித்து சாப்பிடவும்.



 உங்களுக்கு சத்தாண வீட்டிலேயே செய்த டபுள் சாக்லெட் குக்கீஸ் ரெடி. பிள்ளைகளை கூப்பிட்டு கொடுங்கள்.
copy©Feb2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts