ஸோஸ் பேஷாமல்/Sauce Bechamel





ஸோஸ் பேஷாமல்/sauce Bechamel என்பது வேறு வைட் ஸோஸ்/White Sauce/white Sauce/Sauce Blanche  என்பது வேறு.

இன்னைக்கு நாம் பார்க்க போவது ஸோஸ் பேஷாமல்/sauce Bechamel.
இது ஒரு அடிப்படை ஸோஸ்தான். இதை வைத்து நிறைய சமையல் செய்லாம்.
மாவு போட்டு கிண்டும் போது கட்டி கட்டியாக வரமல் பார்த்து கிண்ட வேண்டும். மரக்கரண்டி நல்லது.

இதுக்கு தேவை :

  • 30 கிராம் வெண்ணெய்
  • 1 1/2 மேஜைக்கரண்டி மைதா
  • 1/2 லிட்டர் பால்
  • 200 மில்லி கீரிம்
  • ஜாதிக்காய்த்தூள் கொஞ்சம்
  • உப்பு, மிளகுத்தூள்


செய்முறை

1)ஒரு கசரோலில் வெண்ணெயை உருக்கவும்
2)அது உருகி தண்ணீராக வந்ததும் (ரொம்போ காய விடக்கூடாது ) உடனே,மைதாவை போடவும்.




3)போட்டவுடன் அடிப்பிடிக்கமால்,ஒரத்தில் ஒட்டாமல் நன்றாக் கிண்டிக்கொண்டே இருக்கவும்.




4)மாவு மஞ்சள் நிறமாக ஆனவுடன் திரண்டு வரும். அப்பொழுது, பாலை உற்றவும்.
5)பாலை கொஞ்சம் கொஞ்சம்மாக உற்றவும்.உற்றும் போதே கிண்டிக்கொண்டே இருக்கவும்.
அடிப்பிடிக்க விடக்கூடாது.
அடிப்பிடிக்கமால்,ஒரத்தில் ஒட்டாமல் நன்றாக கிண்டிக்கொண்டே இருக்கவும்.
6)தண்ணீராக இருக்கும் ஸோஸ், கட்டியாக ஆகி விடும்
7)அப்போது கீரிமும் போட்டு விடலாம்




8)  உப்பு  ,மிளகுத்தூள்,ஜாதிக்காய்த்தூள்,எல்லாம் போட்டு கிண்டி விடவும்.

  இதுதான் ஸோஸ் பேஷாமல்.
Copyright feb2014©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts