ரத்தாதூய்/Ratatouille Niçoise

இது நான் இந்த ஊருக்கு வந்த புதிதில்  எனக்கு பிடித்த உணவு வகைகளில் ஓன்று. நாம் நாட்டு உணவுப்போல் ஒரு உணர்வு.

இது ஒரு வெஜிடேரியன் சாப்பாடு என்றுக்கூட சொல்லலாம்.

 ரத்ததூயுடன் சோறும் சாப்பிடலாம். மக்கரோனியும் சாப்பிடலாம். குஸ்குஸ்சுடனும் சாப்பிடனும் சாப்பிடலாம்.

  இதனுடன் பல காய்கறிகள் இருப்பதால் இதுவே போதும் என்று  நினைப்பவர்கள் விட்டுவிடுங்கள்.

  இல்லையென்றால்,முட்டை ஆம்லெட் அல்லது  கறி அல்லது ஸோஸிஸ் நன்றாக இருக்கும்.

இப்போ ரெசிபி பார்ப்போம்.
இது 4 பேருக்கு தேவையானது.
இது பெரும்பாலும் எல்லாருக்கும் பிடித்த ரெசிபி என்று சொல்லலாம்.

சந்தைக்கு போகலாம் வாங்க:
  • வெங்காயம்  3
  • சுக்கினி/குர்ழத்  4
  • கத்தரிக்காய்  4
  • குடைமிளக்காய் 2
  • தக்காளி  4 பெரியது (500 கிராம்)
  • பூண்டு  4 பல்
  • புக்கே கர்னி
  • எண்ணெய்  200 மில்லி
  • உப்பு, மிளகு


அடுக்கலை  முறை:

1)வெங்காயத்தை வெட்டி வைத்துக்கொள்ளவும்.





கத்தரிக்காயை வெட்டி வைத்துக்கொள்ளவும். மற்ற காய்கறிகளையும் வெட்டி வைத்துக்கொள்ளவும்.

2)பூண்டையும் உரித்து வைத்துக்கொள்ளவும்.

3)அடுப்பில் சட்டியை வைத்து  எண்ணெய்யை காயவைக்கவும்
எண்ணெய் காய்த்தவுடன்,வெங்காயம் வதக்கவும்.





ஒரு நிமிடம்  வதங்கினால் போதும்,கத்தரிக்காயை போடவும் வதக்கவும் பிறகு, சுக்கினியை போடவும் வதக்கவும் பிறகு மற்ற  


காய்கறிகளைப்போடவும். வதக்கி பூண்டு, புக்கே கர்னி,உப்பு,மிளகுத்தூள் போடவும். மெதுவாக  வேக வைக்கவும்.
 *தண்ணீர் ஊற்ற வேண்டாம். காய்க்கறிகள் தண்ணீர் விடும்.
அடிக்கடி கிண்டி விடவும். கத்தரிக்காய் அடிப்பிடிக்கும்.

*
 இங்கு நான் செய்து காட்டி இருப்பது ரத்ததூய்,குஸ்குஸ்,முட்டை ஆம்லெட்.


செய்து ரசித்து சாப்பிடுங்கள்.

Comments

Popular Posts