வைரம், என் வைடூரியம்...1


இன்னைக்கு கல்லை பத்தி பார்ப்போம்.


எனக்கு தெரிந்து 
    கல் பலவிதமாக நமக்கு உபயோகப்படுகிறது.
    முதலில் வீடுக்கட்ட கல் இல்லாமல் கிடையாது.
     பிறகு, விலை உயர்ந்த கற்களின் பெயர்களை சொல்லி விலை மதிப்பற்ற குழந்தைகளை கொஞ்சி விளையாட உபயோகப்படுகிறது.

     பத்திரப்படுத்தவும் உபயோகிக்கிறோம். அதுதான் நகை செய்ய. காசு கொடுத்து செய்து பயந்து பத்திரப்படுத்தி. காணப்போனால்,அழுது புலம்ப.
கடைசியாக, எனக்கு தெரிந்தவரை நித்தோ தெராபி செய்ய

     முதலில் நவரத்தனத்தின் பெயர்களை பார்கலாம்.



தமிழ்
English
Français
வைரம்
Diamond
Diamant
வைடூரியம்
Lapis lazuil
Lapis lazuli
கோமேதகம்
Cat’s eye
L’œil de chat
முத்து
Pearl
Perles
பவழம்
Corail
Corail
மரகதம்
Emerald
Émeraude
நீலம்
Saphire
Saphir
மாணிக்கம்
Ruby
Rubis
புஷ்பகரகம்
Topaz
Topaze


     எந்த கல் தெரிகிறதோ இல்லையோ வைரத்தை தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
     அன்று முதல் இன்றுவரை கோஹினோர் வைரம்தான் வரலாறிலிருக்கிறது. அதுவும் நம் நாட்டு வைரம்.
     நம்மவூரில் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களையும் கவர்ந்து இழுப்பது வைரம் தான்.

    பெண்கள், குறைந்தது ஒரு வைர மூக்குத்தி இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைப்பார்கள்.
     எல்லா நாடுகளிலும் மற்ற கல்லைவிட வைரம் என்றால் தெரியாதவர்கள் கிடையாது.

    
   
    ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கற்கள் கிடைக்கிறது. எல்லா கற்களும் ஒரே நாட்டில் கிடைப்பது கிடையாது.
     விலை மதிக்க முடியாத நவரத்தின கற்கள் மட்டும்  இல்லாமல், கனிம கற்களும்(Pierres Minéraux)(mineral stones) நிறைய கிடைக்கிறது. இதுவும் எல்லா நாடுகளிலும் விதவிதமாக கிடைக்கிறது.
     சில கற்கள் மலைகளிலும்,சில கற்கள் கடலிலும் கிடைக்கிறது.
     சில கற்கள் நம் உடல் நலத்திற்காக நாம் உபயோகப்படுத்துகிறோம்.
     சில கற்கள் வாஸ்துக்காக உபயோக படுத்த படுகிறது.
     சிலர் தபால் தலைகளை ஆசையாக சேர்ப்பார்கள் அல்லவா? அதுப்போல் இதையும் சேர்ப்பதில் ஆசைப்படுவார்கள்.
     சில கற்களை நாம் ஒரே நிறத்தில் மட்டும் தான் இருக்கிறது என்று நினைப்போம். அதுத்தான் கிடையாது.
உதாரணமாக பவளம் சிகப்பு கலரில் மட்டும்தான் கிடைக்கிறது என்று பெரும்பாளோர் நினைக்கிறர்கள்.
     பவளம் நிறைய நிறத்தில் கிடைக்கிறது. சிகப்பு,ஆரஞ்சு,கருப்பு மற்றும் நீல நிறங்கள் உள்ளது. இதில் கருப்பும் நீலமும் மட்டும் சில இடங்களில் மட்டும் கிடைப்பதால் இதன் விலை அதிகம்.
     இப்படியே எல்லா கற்களிலும் விதவிதமான நிறங்கள் இருக்கிறது.
     இன்னும் விலை உயர்ந்த கற்களைப்பற்றி எழுதலாமா? வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
 Copyright june2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts