Juicy lemon chicken/ எலுமிச்சை கோழி ஜுஸுசுடன்



இது ஒரு சீனநாட்டு சாப்பாடுதான்.  இதில் இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும்அவர்கள் நாட்டு சாப்பாட்டு  ஏறக்குறைய அப்படித்தானே இருக்கிறது. அதிலும் ஒரு சுவைதானே.

சரி சாப்பாட்டுக்கு போவோம். இது சாதாராணமாக கறியை ஊற வைத்து செய்வார்கள். நமக்கு ஏது அவ்வளவு பொறுமை? எப்போதும் அவசரம் அவசரம்

என்ன தேவை ஏது தேவை என்பது தெரிந்துக் கொள்வோம் வாங்க

 தேவை:
வேக வைக்க :
  • கோழி 1/2 கிலோ
  • சோயா சாஸ்  1 மேஜை கரண்டி
  • வினிகர்  1 மேஜைக்கரண்டி
  • இஞ்சி பூண்டு சாந்து 1 மேஜைக்கரண்டி
  • 1 சின்ன வெங்காயம்





பொறிக்க :
  • முட்டை
  • சோளமாவு
  • இப்போ style லாசொல்லனும் னா corn flour
  • எண்ணெய்






சோஸ்ஸோக்கு :
  • எலுமிச்ச பழ ஜுஸ் 3 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை 1 தேக்கரண்டி
  • சோளமாவு 1/2 தேக்கரண்டி
  • உப்பு 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் 1/2 தேக்கரண்டி




  
எல்லாம் ரெடியா?
 1)வேக வைக்க வேண்டியதை எல்லாம் ஒற்றாக போட்டு குக்கரில் போட்டு பிறட்டி  ஒரு விசில் வந்தால் போதும். இறக்கி விடலாம்.





2)எண்ணெய்யை காய வைக்கவும்.
3)முட்டையை அடிக்கவும். ஒரு பவுலில் வைத்து கொள்ளுங்கள்.








4)சோள மாவை ஒரு தட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.





5)முதலில் சோளமாவில் கோழியை பிரட்டி எடித்துக்கொள்ளுங்கள்.




6)பிறகு கோழியை முட்டையில் துவைத்து எடுத்து மீண்டும் ஒருமுறை சோளமாவில் பிரட்டி எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

7)எண்ணெய காய்ந்ததும் பொட்டு எடுங்கள்.


8)நடுவில் சோஸ் தயாரித்து கொள்ள வேண்டும்.
சோஸ்சுக்கு சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து சிறு தீயில் சோஸ்ஸாக செய்துக்கொள்ளுங்கள்.





இது தண்ணீராகவும் இருக்க கூடாது. கட்டியாகவும் ஆகி விடக்கூடாது.
 கோழி சூடாக இருக்கும் போதே சோஸை ஊற்றி சாப்பிடுங்கள்.


கோழி சுடாக இருக்கும் போதே சோஸில் பிரட்டி எடுத்து விடுங்கள்.

 ஜுஸியாக இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும்.



 copyright©Feb2014 Kolly2wood.blogspot.com



Comments

Popular Posts