தாய்மை அனுபம் 10

இந்த முறை பால் பாட்டிலில் பால் கொடுப்பதில் சில Tips ம்
பிள்ளையை எப்படி குளிப்பாட்டுவது என்றும் பார்போம்.
1)பால் என்றால், சுடசுட கொடுத்து விடாதீர்கள். உங்கள் மணிகட்டில் பால் பாட்டிலை மூடிவிட்டு ஒரு சொட்டு ஊற்றி பாருங்கள். தாங்குகிறது என்றால் கொடுங்கள்.

2)பால் பாட்டில் கழுவும் போதும் நன்றாக கழுவவும். சுடத்தண்ணீரில் சிறிது நேரம் பாயில்/boil பண்ண வேண்டும். Brush  கொண்டு உள்பக்கம் வெளிபக்கம் எல்லாம் Nipple/Têtine னை  கூட சுடத்தண்ணீரால் கழுவ வேண்டும்.

3)பால் பவுடர் அளக்கும் போது பிள்ளைக்கு தாராளமாக கொடுப்பதாக நினைத்துக்கொண்டு கொடுத்த கரண்டியில் கோபுரமாக அளக்க கூடாது. தலைத்தட்டி அளக்க வேண்டும்.

4)பிள்ளைக்கு பசி இன்னும் வேண்டும் என்கிறது  என்று அளவுக்கு மீறி கொடுக்காதீர்கள். டாக்டாரிடம் கேட்டு அதற்கு பிறகு கொடுக்கலாம்.

5)பால் குடித்தவுடன் பிள்ளையின் வாயை தண்ணீரால் துடைக்க வேண்டும்.
சாப்பிட்டதும் தோலில் போட்டு லேசாக தட்டி கொடுங்கள். ஏப்பம் விடட்டும்..

நான் பால் சுடு காட்டுவது என்றால் மைக்ரோ அவண் அல்லது டபுள் பயிலர், அல்லது பிள்ளைக்கு என்று ஸ்பெஷ்லாக(Chauffe biberon) விற்பார்கள், ஏதாவது ஒன்று use பண்ணுவேன்

ஏறக்குறைய எல்லாம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். நடுவில் நினைவுக்கு வந்தால் சொல்கிறேன்.

சாப்பாடு முடிச்சாச்சி.

இப்போ குளிப்பாட்ட வேண்டாமாவாங்க பிள்ளைய குளிப்பாட்டலாம்

இப்பொழுது குளிப்பாட்ட வருவோம்.

தினமும் ஒருமுறை குளிக்க வையுங்கள் நல்லது.

தினமும் குளிப்பட்டுவது மிகவும் நல்லது. காலை அல்லது மாலை எப்பொழுது வோண்டுமானாலும் குளிப்பாட்டலாம். காலை நல்லது.

மிச்சம் இன்னொரு நாளைக்கு குளிக்க வைக்கலாமா?
copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts