தாய்மை அனுபம் 13

     முன்று மாததில்லிருந்து பிள்ளைகள் விளையாட ஆரம்பிப்பார்கள். அதனால், சிறு சிறு கைகளால் பிடிக்கும் ப்ளாஸ்டிகிலான
விளாட்டு சாமான்கள் வாங்கி கொடுக்க வேண்டும்.
  ப்ளாஸ்டிக்கும்  மெதுவாக இருக்க வேண்டும்
கீரிவிடக்கூடாது. சப்தம் செய்யும் ஏதாவது விளையாட்டு கூட வாங்கி போடலாம். அதிகமாக சப்தம் கூடாது. அது காதுக்கு நல்லது கிடையாது.
பிள்ளை பயந்தும் போய்விடும்.
     பிள்ளை குப்புறப்படுக்கும் நாள் அது. அதனால், தரையில் சும்மா  ஒரு பாயிலோ,பெட் ஷீட்டிலோ போட வேண்டாம். திடீர் என்று படுத்து விட்டால் ஆபத்து. எப்போதும் கொஞ்சம் ஏதாவது பஞ்சு போல்  போடவும். தனியாக விடாதீர்கள். பிள்ளையின் இரண்டு பக்கமும் தலையணை போடவும்.
நெகத்தை அடிக்கடி வெட்டி விடுங்கள். முகத்தில் கீரிகொள்ளும்.
கட்டிலில் தனியாக போட்டு விட்டு வந்து விடாதீர்கள். கண் எப்போதும் பிள்ளை மீதே இருக்க வேண்டும்
அதற்காக,
எந்த
வேலை வெட்டி செய்யாமல் அதனுடனே இருக்க வேண்டும் 
என்று அவசியம் கிடையாது. அப்படி பழகினாலும் 
ஆபத்துதான்.கொஞ்சம் உங்களை காணவில்லை 
என்றதும் அழ ஆரம்பிக்கும்.
     இப்பொழுதுதான் ரிலாக்ஸ் நாற்காலி/ Relax chair விற்கிறார்கள்
அதில் போட்டு கட்டி விடலாம். அதில் 
விளையாடிக்கொண்டு இருப்பார்கள். இல்லையென்றால் 
உங்களிடம் பெபி பகி /Poussette/buggy இருந்தால் 
போதும் அதில் கூட உட்கார வைத்து விளையாட 
வைக்கலாம். ரொம்போ  
தூக்கி பழக வேண்டாம்.கை சூடு கண்டு விட்டால் அவ்வளவுதான்.
      பிள்ளைகளிடம் கத்தி கத்தி பேசாதீர்கள்.
 மென்மையாக பேசுங்கள். சின்ன பிள்ளைகள் தானே என்று 
அவர்கள் முன் சண்டைகள் போடாதீர்கள்.எதுவாக இருதாலும் அமைதியாக பேசி தீருங்கள். பிள்ளைகள் பயந்து விடுவார்கள்.சப்தம் அவர்களுக்கு பிடிக்காது. சப்தம் போடுபவர்களையும் அவர்களுக்கு பிடிக்காமல் போய்விடும்.
     நாம் பெரியவர்கள்,நாம் அவர்களுக்கு நல்லதை மட்டுமே சொல்லிக்கொடுக்க வேண்டும். அதிலும் பெற்றோர்களுக்குத்தான்
  100% பங்கு இருக்கிறது.அதை மறக்க கூடாது.அவர்கள் எதிரில்
 நாம் தப்பாக நடக்ககூடாது.
நாம் தான் அவர்களுக்கு முதல் ஆசிரியர்,முதல் நண்பர்,
முதல் அகராதி, முதல் வழிக்காட்டி,முதல் மருத்துவர்,முதல் சமையல்காரர்,இப்படி எத்தனையோ முதலாக இருக்கிறோம்.
அதனால், நாம் ஒன்றில் தவறினால், எல்லாம் போய்விடும்.
  ஆரம்பதிலேயே சொன்னேன் பிள்ளை வளர்ப்பது
அனுபவித்து வளர்க்க வேண்டும்.
நான் சொல்ல வேண்டியதை எல்லாம் 0- 6 மாத 
பிள்ளைக்கு சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்.
 நடுவில் நினைவு வந்தால் சொல்கிறேன்.

இப்போது நான் தொடங்க போவது புது அத்தியாயம்.
அவர் அவர் நாடுகளில் எப்படி எப்படி சாப்பாடு கொடுப்பீர்கள் என்று 
எனக்கு தெரியாது. நான் முன்பு சொன்னதுப்போல் இங்கு நான் எழுதிக்கொண்டிருப்பது நான் என் பிள்ளைகளை வளர்த்த
முறைகள் மட்டுமே. இது ஒரு சிலருக்கு உபயோகப்படலாம் என்ற எண்ணத்துடன் தான் எழுதுகிறேன்.
உபயோகப்பட்டதா இல்லயா என்பது எனக்கு தெரியாது. அப்படி உபயோகப்பட்டிருந்தால் சந்தோஷம்.
    சாப்பாட்டு முறை எனக்கு தெரிந்தது பிரச்சு முறை மட்டுமே
வேறு முறை எனக்கு தெரியாது. எனக்கு யாரும் சொல்லி தரவில்லை.

     இன்று முதல் குழந்தையின் முதல் சாப்பாட்டை தொடங்கலாமா?
குழந்தைக்கு என்று தனியாக ஒரு கசரோல் வைத்துக்கொள்ளுங்கள்.
  அதில் தான் நீங்கள் எது வேக வைத்தாலும் வைக்க வேண்டும்.
நம்ம ஊர் மிக்ஸின் சின்ன ஜார் போதும். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

     இப்போ காய்கறிக்கு வருவோம். கேரட் தான் பிள்ளைக்கு
முதல் உணவு. அதில் கல்சியம் இருப்பதால், வளரும் பிள்ளைக்கு எலும்புக்கும் உட்டசத்தும் தருகிறது.

நாளைக்கு குழந்தைக்கு உணவு ரெசிபி தொடங்குகிறது.
copyright©Feb2014 kolly2wood.blogspot.com


Comments

Popular Posts