Bento/ ஜப்பானியர்களின் லஞ்ச் பாக்ஸ் 2

இன்னும்மொரு பென்டோ உங்களுக்கு. இது வேற மாதிரி.
இன்னைக்கு உங்களுக்கு செயல்முறை விளக்கம்தாங்க. அதான் ரெசிபி தாங்க தரப்போரேன்.
இந்தாங்க பிடிங்க ரெசிபிய.

இதுக்கு தேவையானது

  • சிகப்பு கோஸ் துருவியது.
  • கேரட்
  • முட்டை
  • பாசுமதி அரிசி
  • முபின் காரமானது (இனிப்பு கிடையாது)
  • கருப்பு எள்
  • ழம்போம்/ Jambon/ham  (வேண்டும் என்றால்)
  • சர்க்கரை
  • ரைஸ் வினிகர் அல்லது வெள்ளை வினிகர்
  • wasabi or tabasco
  • மையோனைஸ் அல்லது வினிகரத் சோஸ் உங்களுக்கு பிடித்தது.



 செயல்முறை விளக்கம்
.

1) a)முட்டையை வேக வைத்து உரித்து வைக்கவும்.
b)கேரட்டை கோழியின் கொண்டையை போல் வெட்டி எடுக்கவும்
c)கோழியின் பாதங்களும் உங்கள் கற்பனைக்கேற்ப செய்யவும்.
d)ஒரு கிராம்பைக்கொண்டு கோழியின் மூக்கு போல் வையுங்கள்.
e)மிளகு கோழியின் கண்கள்.
 கோழி வேளை முடிந்தது.

2) இப்போது சோறு,
a)100 கிராம் பாசுமதி அரிசியை கழுவி வேக வைக்கவும்.
சோற்றில் சூடாக இருக்கும் போதே  நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்
b)ஒரு டம்பளர் தண்ணீரில்  2 தேக்கரணடி சர்க்கரை 3 தேக்கரண்டி வினீகர் ஊற்றி கலக்கி, அந்த சோஸ்ஸை சோற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து விட வேண்டும். 
எல்லாவற்றையும் ஊற்ற வேண்டாம். ஒரு அளவுக்கு  போதும். சொத சொதப்பாக இருக்க கூடாது.
c)கொஞ்சமாக சோறு ஆறியவுடன் கொஞ்சம்  ழம்போம்/ Jambon/ham  வெட்டி போடவும். எள், (மஞ்சள் நிறத்தில் இருக்கும் )சோளம் வேக வைத்து போடவும்.
சோற்றில் நன்றாக எல்லாவற்றையும் கலந்து விடவும்
சோறு ரெடி.

3)இப்பொழுது சிகப்பு கோஸ் .
  சிகப்பு கோஸ்ஸை துருவி அதில் நீங்கள் விரும்பிய சோஸ்ஸை கலந்து வைக்கவும்.

இப்போது எல்லாம் ரெடியாக இருக்கிறது.

4)முபினும் செய்து விடவேண்டும்.

அடுத்தமுறை சொல்லி தருகிறேன்.

5)இப்போது ஒரு பாக்ஸ் எடுத்து கலந்து வைத்த சோற்றை ஒரு பக்கம் வைக்க வேண்டும். மற்றொரு பக்கம் கோஸ் சல்லாதை வைக்க வேண்டும்.

6)அதன் மீது நாம் செய்து வைத்திருக்கும் கோழியை செட் பண்ணி வைக்க வேண்டும்
7)இன்னொரு பக்கம் முபின்.


*உங்களுக்கு வேண்டும் என்றால் , காரத்திற்கு ஊறுக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
*இல்லையென்றால் சோற்றில் கொஞ்சம் டபாஸ்கோ  ஊற்றி கிளறிக்கொள்ளுங்கள்.

இது ஒரு பென்டோ மாடல்.
இது எப்படி இருக்கு?
copyright©Feb2014 kolly2wood.blogspot.com

Comments

Popular Posts