லெமன் டீ கேக்/Lemon Tea cake

டீக்கூட சாப்பிட டீ கேக் இன்னைக்கு செய்ய போறோம். அதாவது Raw டீயவே கேக்ல போட்டு செய்ய போறோமே!
டீனா, டீ பேக்/ Tea Bag இருக்கு இல்லையாஅதுதான் இதுல உபயோகப்படுத்தனும்

 தயவு செய்து இதுல டீ உபயோகப்படுத்துவதால் கசக்கும் என்று நினைக்க வேண்டாம். இது நல்லா இருக்கும். புது விதமாக இருக்கும்.


இப்போ எது தேவை என்று பார்ப்போமா?

  • மைதா 150 கிராம்  1 1/2 கப்
  • ஐசிங் ஷுகர் 130 கிராம் 1 கப்
  • வெண்ணெய்  150 கிராம் +1/2 கப்
  • பாதாம் பவுடர்/ground Almond  15 கிராம்  3 மேஜைக்கரண்டி
  • முட்டை 3
  • பால் 1 மேஜைக்கரண்டி
  • பேக்கிங் பவுடர்1/4 டீஸ்பூன்
  • தேன்1/4 டீஸ்பூன்
  • உப்பு      1 சிட்டிக்கை
  • லெமன் டீ பேக்/Lemon tea bag  2

  • எலுமிச்சை சிரப் :
  • சர்க்கரை 30- 50 கிராம் 6 மேஜைக்கரண்டி
  • தண்ணீர்  2 மடங்கு
  • எலுமிச்ச ஜுஸ் 3 - 4 மேஜைக்கரண்டி


இப்போ செய்யனுமே!

வெண்ணெய் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.
அவண்170°  40 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு அவணை பொருத்து.
இது கேக்.முற்சூடு செய்யனும்

1)வெண்ணெய்,தேன்,ஐசிங் ஜுகரை, மூன்றையும்  நன்றாக நுரைக்க அடிக்கவும்.
2)இத்துடன் முட்டையை அதிலேயே உடைத்து உற்றவும்.நன்றாக அடிக்கவும்.
3)முட்டை நன்றாக வெண்ணெய்யில் கலந்ததும், உப்பும் டீ பேக்கை பிரித்து 
கொட்டவும்

அது முட்டையில் நன்றாக கலந்ததும், கலரே அழகாக இருக்கிறது.
4)இத்துடன் பாதாம் பவுடர் போடவும். அதுவும் நன்றாக கலந்து விடவும்..
5)அதுவும் கலந்தவுடன் பாலையும் அதில் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
6)மைதாவையும் பேக்கிங் பவுடரையும் சலிக்கவும்.
7)சலித்த மைதாவை கலந்து வைத்திருக்கும் வெண்ணெய்யில் கொட்டி,
spatule லால் மெதுவாக கலக்கவும்

8)அதுவும் நன்றாக கலந்ததும் கேக் மோல்டில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி மைதா போட்டு,மாவை ஊற்றி அவணில் வைக்கவும்.



கேக் வெந்ததும் வெளியே எடுக்கவும்.

9)கேக் சூடு ஆறுவதற்கு முன்பு,சூடான எலுமிச்ச சிரப் செய்து அதனை கேக்கின் மீது ப்ரஸ்/brush கொண்டு தடவவும்.

எலுமிச்ச சிரப் செய்யும் முறை:
சர்க்கரையும் தண்ணீரையும் கலந்து சூடாக்கவும்.எலும்மிச்சப்பழச்சாற்றையும் ஊற்றி  கலந்து விடவும்.

சிரப் கேக்கில் தடவும் போது கேக்கும் சூடாக இருக்க வேண்டும். சிரப்பும் சூடாக இருக்க வேண்டும்.



ஆறிய பிறகு சாப்பிடவும்.

கேக் மோல்ட் என்றால் 40- 50 நிமிடங்கள்
சாதாரணம் என்றால் 30 - 35 நிமிடங்கள்


சாப்பிட்டு பார்த்து எப்படி இருந்தது என்று செல்லுங்கள்.



copyright©Feb2014kolly2wood.blogspot.com


Comments

Popular Posts