ஸ்பகத்தி நெஸ்ட்/Spaghetti Nest

தேவையான பொருள்கள்

கறி உருண்டைக்கு:
  • கொத்தின கறி  750 கிராம்
  • முட்டை  1
  • ரொட்டி துண்டு 2
  • வெங்காயம் 1
  • பட்டை,மாசிகாய் தூய் 1/4டீஸ்பூன்
  • சீரகம்  1/2 டீஸ்பூன்
  • பால் கொஞ்சம்
  • பார்சி இலை
  • உப்பு,மிளகுதூள்

தக்காளி ஸோஸ்ஸுக்கு:
  • தக்காளி 750 கிராம்
  • வெங்காயம் 2 - 3
  • பூண்டு 5 பல்
  • பசலிக் இலை
  • உப்பு,மிளகுதூள்
  • எண்ணெய்  5 - 6 மேஜைக்கரண்டி
  • சீஸ் துருவியது (Parmessan or guyére) 600 கிராம்
  • மோசேரேலா சீஸ் (Mozzarella)



ஸ்பகத்தி (Spaghetti)  500- 750 கிராம்

இப்போ செய்ய தொடங்கலாம்.

1)முதலில் வழக்கம் போல வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும். இது கறி உருண்டைக்கு.
2)அடுத்து ரொட்டி துண்டு இருக்கிறது அல்லவா அதை பாலில் ஊறவைக்க வேண்டும்.
3)கறியுடன் வெங்காயம் முட்டை ரொட்டி, மசாலாத்தூள்கள்,பார்சி இலை, உப்பு,மிளகுதூள் எல்லாம் போட்டு அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு என்று பிரட்டி எடுத்தால் உருண்டைக்கு கறி தயார்.
4)உருண்டைகளாக ஆக்கி கொள்ளுங்கள்கொஞ்சம் நேரம் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து விடுங்கள்.

அடுத்து நாம் செய்ய போவது தக்காளி ஸோஸ்.
1)தக்காளியை கழுவி வேக வைத்து தோலை எடுத்து விடுங்கள்.
2)தோலை எடுத்து விட்டு மிக்ஸில் போட்டு நன்றாக அரைத்து விடுங்கள்.
  இது ரெடியா?

கறி உருண்டையும் ரெடியா?
ஸோஸுக்காக சொன்ன வெங்காயம் அரிந்து விட்டிர்களா?
பூண்டு உரித்து அரிந்து விட்டிர்களா?

ஸ்பகித்தியை வேக வைக்கவும்.
கறியை வெளியே எடுங்கள்.
அவணை முற்சூடு செய்யவும் 180°

1)ஒரு க்சரோலில் எண்ணெய் ஊற்றுங்கள்.எண்ணெய் காய்ந்ததும் கறி 

2)உருண்டைகளை  போட்டு சிவக்க விடுங்கள்;சிவந்ததும் ஜல்லி கரண்டியால்




எடுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வையுங்கள்
3)அதே எண்ணெய்யில் வெங்காயத்தை சிவக்க வைக்கவும்.பூண்டையும்
 போடுங்கள்.
4)அரைத்த தக்காளியும் ஊற்றுங்கள்.உப்பு,மிளகுதூள் போடவும்..
கொதிக்கும் போது கறி உருண்டைகளைப்போடவும்.பசலிக் இலை போட்டு இறக்கவும்.
5)அவணில் வைக்கும் தட்டில்  வேக வைத்த ஸ்பகித்தியை வட்ட வட்டமாக வைத்து நடுவில் தக்காளி ஸோஸ் வைத்து இரண்டு கறி உருண்டைகள் வைத்து மோசேரேலா சீஸ் ஒரு துண்டு வைத்து  துருவிய சீஸ் கொஞ்சம் போடவும்.
இப்படியே 7 - 8 Nest வரை வரும் .செய்து முற்சூடு செய்த அவணில் வைக்கவும். 20 - 20 நிமிடங்கள் வைத்தால் போதும்.

  வெளியே எடுத்து தக்காளி ஸோஸ் ஊற்றி சாப்பிடவும்.
copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts