AC² பழச்சாறு

முதல் முதாலாக ஆரம்பிக்கும் பானம் ஒரு வைட்டமின் பானமாக இருந்து ஒரு தெம்பை கொடுக்கட்டும்.அதிலும் இது நீர் சத்து வைட்டமீன்கள் எல்லா சத்துக்களும் கொண்ட பானம்.

சிறு பிள்ளைகள் கேரட் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும், பழத்துடன் கலந்து ஒரு காக்டைல் செய்து கொடுத்து பாருங்களேன். புது விதமாக இருப்பதால், குடித்து விடுவார்கள்.

நான் இதற்க்கு வைத்த பெயர்

AC² பழச்சாறு

இதற்க்கு தேவை

  • 2 ஆரஞ்சு பழங்கள்
  • 4 கேரட்கள்
  • 1/2 எலுமிச்சம் பழம்


1)4 கேரட்டையும் சுத்தப்படுத்தி ஜுஸ் எடுத்துக்கொள்ளுங்கள்
2 ஆரஞ்சு பழங்களையும் ஜுஸ் பிழிந்துக்கொள்ளுங்கள்.
எலுமிச்சம் பழத்தையும் ஜுஸ் பிழிந்துக்கொள்ளுங்கள்.

2)நீங்கள் சர்க்கரை அதிகம் சாப்பிடுபவர் என்றால் சர்க்கரையும் வேண்டும்.
சர்க்கரை வேண்டாம் அப்படியே குடிப்பேன் என்பவர் என்றால், நல்லது. சர்க்கரை ரத்து.

3)அனைத்து சாறுகளும் ரெடியாக்கியதும்.
4)முதலில் ஆரஞ்சு சாறை பாதி டம்பளரில் ஊற்றவும்.
3/4 டம்பளர் வரை கேரட் சாறை ஊற்றவும். பிறகு, 
கொஞ்சமாக எலுமிச்ச சாறை கலக்கவும்
சர்க்கரை கலந்து குடிக்கவும்.
  காலை நேரத்தில் மிகவும் நல்லது.

அவர் அவர்  ருசிக்கேற்ப புளிப்பு அதிகம் வேண்டும் என்றால் ஆரஞ்சும் எலுமிச்சமும் கூடுதல்லாகவும், புளிப்பு சர்க்கரை குறைவாகவும் சேர்த்துக்கொள்ளவும்+, -A
புளிப்பு அதிகம் பிடிக்காதவர்கள் கேரட் அதிகம் பிடித்தவர்கள், ஆரஞ்சு,எலுமிச்சம் குறைவக்கவும் சர்க்கரை அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளலாம். -, +A
எப்படியும் ratio நம் கையில்.

என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று கேட்டால்,
சர்க்கரை இல்லாமல் இயற்கையாக பழ ருசியில் குடிப்பதுதான்.
ஆனால், சில சமயத்தில் பழத்தில் கூட, சீ..சீ  இந்த பழம் புளிக்கும்மாக இருக்கும்போது என்ன செய்வது?

Glucose அல்லது Sucros நமஹதான் !



நம்ம கேரட்டில் வைட்டமின்  A,K கொஞ்சம்   C இருக்கிறது.  
மினரல் என்று பார்த்தால் பொட்டஷியம், கால்ஷியம்,மக்னிஷியம்,
இரும்பு சத்துக்கள் இருக்கிறது.

அடுத்து நம்ம ஆரஞ்சு வைட்டமின் C , நிறைய நீர் சத்துகால்ஷியம்,பொட்டஷியம்,இரும்பு,செப்பு(cuivre)எல்லாம் இருக்கு.

அடுத்து எலுமிச்சை,இதுவும் ஆரஞ்சுப்போலதான்.நீர் சத்து அதிகம்.

இப்போ தெரியுதா எதுக்கு நான் இந்த  AC² பழச்சாறு இந்த பேரு வைச்சேன்னு? 
புரிஞ்சா சரி.


copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments