கேரட் ப்யூரே/carotte Purée

நான் உங்களிடம் கூறியது போல் இது தனி பாகம். குழந்தைக்களின் உணவு. அவர்களின் உணவு தயார் செய்வது எப்படி? எனக்கு தெரிந்த ரெசிபிக்கள் உங்களுக்கு இங்கு சொல்லி தருகிறேன். அதனை அவர் அவர் பிள்ளைகள் உடல் நலன்களுக்கு எது ஏற்றுக்கொள்ளும் என்று டாக்டரிடம் கேட்டு கொடுங்கள். இது நான் என் பிள்ளைகளுக்கு தயாரித்துக் கொடுத்தது.

கேரட் ப்யூரே


    முதலில் நாம் பார்க்க போவது கேரட் . 
    இது பிள்ளைகளின் முதல் உணவு.
 இதில் இனிப்பு சுவை கலந்து இருப்பதால் பிள்ளைகள் பெரும்பாலும் சாப்பிட  மறுப்பதுக்கிடையாது.

கேரட் ப்யூரே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
1)2 கேரட்  எடுத்துக்கொள்ளுங்கள்




2)கேரட் தோலை சீவி தூண்டுப்போட்டுக்கொள்ளவும்.
3)ஒரு கசரோலில் கேரட்டை போட்டு தண்ணீரையும் ஊற்றவும்.

வேக விடவும்.


4)வெந்த பின்பு நன்றாக அரைக்கவும்.





வேக வைக்கும் போது உப்பு,சர்க்கரை எதுவும் போடக்கூடாது.
பிள்ளைக்கு கொடுக்கும் போதும் எதுவும் போட்டு கொடுக்க கூடாது.
அப்படியே கொடுக்க வேண்டும்.



6 மாத பிள்ளைக்கு 60 கிராமிலிருந்து 120 கிராம் வரை  ப்யூர்ரே செய்து    கொடுக்கலாம்.

சாப்பிட ரொம்பவும் அடம்பிடித்தால் குழந்தை குடிக்கும் பாலை கொஞ்சமாக ஊற்றி (வாசனைக்காககொடுக்கவும்.

copyright©Feb2014 kolly2wood.blogspot.com




Comments