க்ராத்தேன் தே மக்கரோனி/Gratin de macaroni

இன்று நாம் சமைக்க போகிறது Gratin/க்ராத்தேன்.
இது பிரான்சை/France  பொருத்தவரை எல்லாருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு. இது சாதரண நாளிலும் செய்லாம். விழாநாட்களிலும் செய்லாம்.எல்லா வீடுகளிலும் செய்யும் ஒரு சாப்பாடு.
க்ராத்தேன் என்பதை மக்கரோனியில் மட்டும் கிடையாது,உருளைகிழங்கு,கோஸ் போன்ற பல காய்கறிகளில் கூடச்செய்யலாம். நாம் செய்யும் முறை காய்கறிக்கேற்ப மாறுப்படும்.
சமைக்க போகலாம் வாங்க

இப்போ செய்ய போறது மக்கரோனி  க்ராத்தேன் தானே?

இதுக்கு தேவை
  • மக்கரோனி 500 கிராம்
  • காளான்/மஷ்ரும் 400 கிராம்


  • வெண்ணெய் 30 கிராம்
  • பால் 1/2 லிட்டர்
  • கீரிம்  200 மிலி
  • மைதா 1 1/2 மேஜைக்கரண்டி
  • ஜாதிக்காய்தூள் சிறிது
  • உப்புதூள்,மிளகுதூள்

டாப்பிங் செய்ய
  • துருவிய சீஸ்/grated cheese 300 கிராம்
  • பிரட் க்ரம்ஸ்/breadcrumbs  100 கிராம்
  • வெண்ணெய்  50 கிராம்

எல்லாம் ரெடியா?
ஒண்ணு மறந்து விட்டேன். 
நீங்கள் விஜிடேரியன் என்றால் இது போதும்.
நான் Non-விஜிடெரியன் அதனால், இதில் இறால் அல்லது லர்தோன்/lardon /diced bacon அல்லது ஜம்போம்/jambonஅல்லது கறியை வேகவைத்து பிய்த்துப்போடுவேன்.

  ம் இப்போ எல்லாம் ரெடி.
தொடங்கலாம் நம்ப சமையல


1)தண்ணீரை சுட வைச்சு  மக்கரோனிய 10 நிமிடம் வேகவிட்டு வடித்து ரெடியா வைக்கவும். உப்பு போட்டு வடிங்க.
2)இப்பொழுது அவணை முற்சூடு செய்துக்கொள்ளுங்கள் 200°
3)அப்புறம் ஸோஸ் பேஷமல் செய்யனும்.



அதுதான்  சொல்லிக்கொடுத்தாச்சே. செய்து பார்த்து இருப்பீர்களே?
ஆனா இதிலா என்ன கூடுதலா செய்ய போகிறீர்கள் என்றால்?
கீரிம் போடும் வரை எல்லாம் ஒரே மாதிரி தான்




4)அடுப்பில் இருந்து இறக்கி வைத்து மஷ்ருமை போட்டு நன்றாக கலந்து விடவும்.
5)மஷ்ரூம் முன்பே வேகவைத்து இருக்கவேண்டும். இல்லையென்றால், டின்னில் உள்ளதாக இருந்தாலும் பராவயில்லை.
6)மஷ்ரூம் கூடவே இந்த கறி சேர்பவர்கள் யாராவது இருந்தால் சேர்த்து விடுங்கள். எல்லாம் இந்த bechamel/பேஷமல்லில் சேர்த்து விடவேண்டும். நன்றாக கலக்கி விடவேண்டும்.

7)அவணில் வைக்கும் தட்டில் முதலில் மக்கரோனியை பாதி வைத்து கொஞ்சமாக பேஷமல் ஊற்றவும்.
8)மீதி பாதி மக்கரோனியை போட்டு மீதி பேஷமல்லை ஊற்றி அதன் மேல் துருவிய சீஸை போட்டு,பிரட்க்ரம்ஸ் தூவி விட்டு அதன் மேல் வெண்ணெய்
வைத்து 


அவணில் வைக்கவும்180° வில் 25 நிமிடங்கள் வைக்கவும்.
9)25 - 30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து சுடசுட கீரிமும் சீஸுடனும் சாப்பிட  நன்றாக இருக்கும்.

நான் சொன்ன அளவு 5 பேருக்கு சரியாக இருக்கும்.

 copyright©Feb2014kolly2wood.blogspot.com


Comments

Popular Posts