க்ரேப் திருவிழா/Fête des crêpes/Fête de Chandeleur



இன்னைக்கு இங்கு க்ரேப்/crêpes திருவிழா.

அப்படி என்றால் என்னவென்று பார்ப்போமா.

      கிறிஸ்துவ முறைப்படி:  யேசு பிறந்து 40 நாட்கள் ஆனபிறகு  யூத முறைப்படி கோவிலில் ஒப்புக்கொடுத்த நாள்,என்று 7ஆம் நூற்றாண்டில்லிருந்து கொண்டாடுகிறார்கள்.

      இதற்கு உண்மையான வார்த்தை Fête des chandelles இது இலத்தின் வார்த்தையில் இருந்து வந்தது.
 Festa Candelarum/Candela என்றால்  வெளிச்சம் .
அதிலும் மெழுகுவத்திலிருத்து வரும் வெளிச்சம்.

ரோமன் முறைப்படி ரோமன் முறைப்படி  இது 15 பிப்ரவரி மாதம் கொண்டாடி வந்தனர். அவர்கள் இந்த விழா கொண்டாடியதன் காரணம், சீக்கிரமாக சூரியன் வரும், நல்ல வெளிச்சம் வரும். கோதுமை மற்றும் பலத்தானியங்கங்களை அறுவடை செய்யும் நன்னாள் வருகிற சந்தோஷம். அதனால், அவர்கள் விளக்கு கொளுத்தி சந்தோஷசப்பட்டார்கள். சூரியனை வரவேற்க, சூரியனைப்போல்  வட்ட வடிவமாக ஒரு அடை சுட்டார்கள்.

அந்த அடைத்தான் இன்று க்ரேப்பாக மாறிப்போய் இருக்கிறது.

பிப்ரவரி 15 தேதிகளில் கொண்டாடியது, வருடாவருடம்
 பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது

இங்கு க்ரேப்/ crêpes திருவிழாவின்போது எல்லா வீடுகளிலும் க்ரேப் சுடுவார்கள். ஜாம்,சாக்லெட் வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும்.

இந்த விழா பல ஐரோப்பிய, அமெரிக்க  நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

க்ரேப்/ crêpes என்பது மெல்லிய மைதா தோசை போன்றது.


இன்று பிள்ளைக்கள் எல்லாருக்கும் கொண்டட்டம்தான். நன்றாக சாப்பிடுவார்கள்.

copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts