கார்ன் டாக்/Corn Dog


    
இது நான் முதன் முதலாக என் கணவரின்
பிறந்தநாள் விழாவிற்காக செய்தேன். வந்தவர்கள் எல்லோருக்கும் 
மிகவும் பிடித்து இருந்தது. எப்பொழுதும் apéritif க்கு சின்ன சின்ன
ஸோசிசை/Sausage வைத்து tooth pick குத்தி வைத்து விடுவேன்.    
இந்த முறை இப்படி செய்து வைத்து புது முறையாக இருந்து
சின்ன சின்ன ஸோசேஜ்/sausage தான் செய்தேன்.
இது ஒரு அமெரிக்கன் சாப்பாடு.(North American street food)

    நீங்களும் செய்துப்பார்த்து அசத்துங்க.   
          
என்ன என்ன தேவை?
  • மைதா 200 கிராம் 11/2 கப்
  • சோளமாவு 200 கிராம் 11/4 கப்
  • பேக்கிங் பவுடர் 1 மேஜைகரண்டி
  • சர்க்கரை 50 கிராம்  2 மேஜைக்கரண்டி
  • முட்டை   1 - 2
  • பால் அல்லது மோர் 1 1/2 கப்
  • உப்பு 1 டீஸ்பூன்
  • எண்ணெய் பொறிக்க
  • 10- 12 ஸோசேஜ்/Sausage/saucisse



இப்போ செய்யப் போகிற முறை எப்படி?

1)முட்டையையும் மோரையும் அடித்துக்கொள்ளவும்.


2)மைதா,சோளமாவு எல்லாவற்றையும் கலக்கவும்.



எல்லாவற்றையும் கலக்கவும்



4)எண்ணெய்யை காய வைக்கவும்.

5)அதற்குள் ஸோசேஞை குச்சில் குத்தி வைக்கவும்.

6)ரெடியாகவுள்ள மாவில் ஸோசேஜ் விட்டு 




7)  சூடாக உள்ள எண்ணெயில் போடவும். சிவந்தும்  சாப்பிடவும்.

   இதுதான் கோர்ன் டாக்.

கலோரி: 273.3
கொழுப்பு:17.6
புரதம்:8.6

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் மிகவும் நிச்சயமாக பிடிக்கும் இது.

அப்படி பிடிக்கவில்லை என்றால், எனக்கு அனுப்பி வைத்து விடுங்கள் நான் சாப்பிட்டு விடுகிறேன்.

 copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts