ரோஸ் கேக்/ Saint Valentin day's Rose Cake

Saint Valentin தினதிற்கு நான் செய்த ரோஸ் கேக் உங்களுக்கும்.
எடுத்து சாப்பிடுங்கள்.
செய்து சாப்பிட வேண்டும் என்றால் பிடிங்க ரெசிப்பிய.

வேண்ணும்முங்கிற பொருள்கள் இதுதாங்க:

1 பவுல்

  • 130 கிராம் சர்க்கரை
  • 6 முட்டையின் மஞ்சள் கரு
  • 1 மேஜைக்கரண்டி வனிலா எஸன்ஸ்
வது பவுல்
  • முட்டையின் வெள்ளை கரு
  • 50 கிராம் சர்க்கரை
  • 1 பின்ச் உப்பு

சலிக்கவும்

  • 90 கிராம் மைதா
  • 70 கிராம் சோள மாவு/corn flour/Maïzena


இப்போ செய்ய வேண்டியது இதுதாங்க:
1)முதல் பவுல் இருக்கு இல்லையா? அதில் உள்ளதை நல்லா கிரீமா ஆகும்


வரை அடிங்க egg beater  ஆல்

2)2வது பவுலில் இருக்கும் முட்டையின் வெள்ளைக் கருவை நுரை பொங்க நன்றாக அடிக்கவும்.
எக் பீட்டைரை எடுத்தால்,நீங்கள் அடித்த  முட்டையின் வெள்ளை கரு குருவியின் வாய்ப் போல் கூர்மையாய் இருக்க வேண்டும்.



3)கொஞ்சம் கொஞ்சமாக 50 கிராம் சர்க்கரையை போட்டுக்கொண்டே வெள்ளைக் கருவை மீண்டும் அடிக்கவும்.

3)  2 மாவையும்சலிக்கவும்.



4)அவணை220° முற்சூடு செய்துக்கொள்ளவும்.

5)அடித்து வைத்துள்ள வெள்ளைக்கரு கொஞ்சம், சலித்து வைத்த மாவு கொஞ்சம்,
  அடித்து வைத்துள்ள  மஞ்சள் கரு கொஞ்சம் என்று மாற்றி மாற்றிப் போட்டவும்.

6)போடும் போது வெள்ளைக் கரு உடையாமல் spatuleலால் கிண்டி விடவும்.


எல்லாவற்றையும் நன்றாக கலந்ததும்,மோல்டில் ஊற்றவும்.


7)அவணில் வைக்கவும். 130°ல் 45 நிமிடங்கள் அல்லது 50 நிமிடங்கள் வைக்கவும்.

8)வெந்ததும் எடுக்கவும்.

மோல்ட்  ரோஸ்மாதிரி ழமானதாக  என்றால்,பாதிக்கு மேல் நிரப்ப வேண்டாம்.

கொஞ்சம் ஆறியதும் மோல்டிலிருந்து  எடுத்து ஆற விட்டு ஐசிங் ஸுகர் மேலே தூவி விடவும்.

இதை கத்தோ சவ்வா/Gâteau de Savoie   என்று சொல்லுவார்கள்

இந்தாங்க ரோஸ். சாப்பிடுங்க


copy©Feb2014 Kolly2wood.blogspot.com








Comments

Popular Posts