கேரட் கேக் /Carrot cake

இன்னைக்கு நம்ம செய்ய போவது கேரட் கேக்இது நல்லா பாதாம் போட்டு செய்த மாதிரி இருக்கும். எல்லாரும் கேட்பார்கள் இதில் பாதாம் பவுடர் கலந்து இருக்கிறீர்களா? என்று.ஆனா, இதுல பாதம் கீதாம் பவுடர் எதுவும் கலக்கவும்  கிடையாது.

இதற்கு தேவையாவை லிஸ்ட்  இது தானுங்கு:
  • கேரட்  3 கப்
  • பிரவுன் ஷுகர் 1/2 கப்
  • முட்டை  2
  • எண்ணெய்  1/2 கப்
  • சர்க்கரை 1/2 + 2 மேஜைக்கரண்டி
  • மைதா 11/2 கப்
  • பேக்கிங் பவுடர் 3/4 தேக்கரண்டி
  • வனிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி
  • உப்பு 1/4 தேக்கரண்டி
  • அன்னாசி 1/2 கப்

வேண்டுமானால்  ஏதாவது ஒரு நட்ஸ் போடலாம்.
இதுல நான் போடல



செய்ய ஆரம்பிக்கலாம்:
1)கேரட்டை துருவிக்கொள்ளவும். பிரவுன் ஷுகரையும் துருவிய கேரட்டையும் கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.


2)அன்னாசி பழத்தை நன்றாக ஈரம் போக துடைத்து, ஒன்றும் பாதியாக அரைத்துக்கொள்ளவும்.


3)ஒரு மணி நேரம் கழித்து,முட்டையை நன்றாக அடிக்கவும்.


4)  அடித்த முட்டையுடன் சக்கரையை போட்டு அடிக்கவும் அதுவும் கலந்து வரவேண்டும்.


5)பிறகு, எண்ணெய்யை ஊற்றி அடிக்கவும்.அது நன்றாக கலந்து வரவேண்டும்.


6)அது வந்தவுடன்,hand whipper ரால் மைதா, பேகிங் பவுடர், உப்பு போட்டு கலந்து விடவும். கட்டி தட்டாமல் கலந்து விடவும்.


7)கலந்து விட்டவுடன், நாம் ஊற வைத்துள்ள கேரட்டை நன்றாக பிழிந்து எடுத்து மாவுடன் கலந்து விடவும்.

மிகவும் கட்டியான பதத்தில் இருக்கும்.
8)கேரட் பிழிந்த தண்ணீர் இருக்கிறது அல்லவா? அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி  மாவை கலக்கவும்.

அதிகமாக ஊற்றி விடவேண்டாம்.
9)அவணை முற்சூடு செய்துக்கொள்ளவும் 180°
இப்பொழுது மாவு கேக் மாவு பதம் வந்து விட்டதா
10)அப்படி என்றால்,நீங்கள்  உங்கள் கேக்கை,உங்களுக்கு பிடித்த ஒரு மோல்டில் ஊற்றி முற்சூடி செய்த அவணில் 45 - 50 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.








உங்கள் கேரட் கேக் ரெடி



சாப்பிட்டுதான் பாருங்களேன். நான்   செய்தது   இதோ. நீங்கள் சுவைதிட.

நீங்கள் செய்து எனக்கு அனுப்புங்க.


copyright©Feb2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts