KFC சிக்கன்

இந்த முறையில் செய்து பாருங்கள். நன்றாக மொறு மொறுவென்று இருக்கிறது.எப்படி எப்படியோ செய்து பார்த்து விட்டு இதுதான் சரியாகப்பட்டதுஇது aperitif vs starter

தேவையானது:
  • 6 கோழி கால் பகுதி
வேண்டுமானால்,12 இறக்கை (முன் பகுதி மட்டும் 
போட்டுக்கொள்ளுங்கள் .)


 எதுவாக இருந்தாலும் தோலை எடுக்கக்கூடாது. அதாவது உரித்து விடக்கூடாது.
அதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.


கோழியில் போட்டு பிரட்டி வேகவைக்க
  • இஞ்சி பூண்டு சாந்து 1டீஸ்பூன்
  • மிளக்காய்த்தூள் 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
  • கறுப்பு உப்புத்தூள் ⅟4 டீஸ்பூன்
  • உப்புத்தூள் 1 டீஸ்பூன்
  • காய்ந்த பேசல் இலை 1 டீஸ்பூன்


  • மைதா 1 கப்
  • முட்டை 2
  • கப் கார்ன் ப்ளாக்ஸ் /Corn Flaxes1 1/2 கப்
  • எண்ணெய் பொறிக்க



செய்துதான் பாருங்களேன்

1)கோழியை மாசாலா போட்டு பாதிவேக்காட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.
2)முட்டையை அடித்து வைத்துக்கொள்ளவும்.
3)கார்ன் ப்ளாக்ஸை ஒன்றும் பாதியுமாக உடைத்து நொறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4)மைதா மாவை ஒரு தட்டில் கொட்டி வைத்துக்கொள்ளவும்.
5)எண்ணெயை காயவைக்கவும்
6)அரைவேக்காட்டில் உள்ள கோழியை முதலில் raw மைதா மாவில் பிரட்டவும்.
7)பிறகு அடித்து வைத்துள்ள முட்டையில் துவைத்து எடுக்கவும்.
8)பிறகு நொறுக்கி வைத்துள்ள கார்ன் ப்ளாக்ஸில் பிரட்டிவும்.

9)நன்றாக காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமானவுடன் எடுக்கவும்.

இப்படிதான் நான் வீட்டில் செய்வேன். என் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கும்
அதனால் உங்களுடன் பகிர்ந்துக்கொண்டேன்.



copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts