தாய்மை அனுபம் 11

குளிக்க வைக்கலாமா?

    பிள்ளையை குளியல் அறைக்கு கொண்டு வருவதற்கு முன்பே அதற்கு தேவையானவைகளை எடுத்து வைத்து விட வேண்டும்.
     பிள்ளையை அழைத்து வந்து விட்டு தனியாக விட்டு விட்டு அங்கும் இங்கும் அலைய கூடாது. அது சரிக்கிடையாது. ஆபத்து.
     தண்ணீர் சூடு சரியாக இருக்கிறதா? என்று பார்க்க நாம் நமது  கைமுட்டியை வைத்து பார்க்க வேண்டும். சரியாக அது தாங்கினால் போதும்.பிள்ளைக்கு அது தாங்கும்.
     முதலில் பிள்ளைக்கு பார்க்க வேண்டியது டெம்பரேச்சேர் 36.5-.37° இருந்தால் போதும். குளிக்க வைக்கலாம்.
சட்டையை கழட்டியதும், பிள்ளை உடம்பு நடுங்கத்தான் செய்யும். 
அது இயற்கை.அழுவதும் இயற்கை. நீங்கள் அதனுடன் ஏதாவது பேசிக்கொண்டே எல்லாம் செய்யவேண்டும்.நாள் ஆக ஆக
 அல்லது நேரம் ஆக ஆக சரியாகி விடும். பிள்ளைகளை பொருத்தது.
இடது கையால் பிள்ளையின் தலை முதல் முதுகு வரை பிடித்துக்கொள்ளுங்கள். முதலில் உடம்பில் சோப்பு போட்டு கழுவுங்கள். பிறகு தலைக்கு போடுங்கள். தலைக்கு சோப்பு போடும் போது எப்பொழுதும் பிள்ளை நம்மை பார்த்தபடிதான் இருக்க வேண்டும்.தலைகீழ் இருக்க கூடாது.தண்ணீர் ஊற்றும் போதும் முகத்தில்படாமல் ஊற்ற வேண்டும்.கண்ணில் பட்டால் எறியும்.

    தொப்புள் கொடி என்பது பிள்ளை பிறந்து 10 அல்லது 15 நாட்களில் தானாகதான் விழும்.நீங்களாக எதுவும் செய்ய வேண்டாம்.
ஆனால்,அதற்கு குளித்ததும் டாக்டரின் ஆலோசனை கேட்டு மருந்து வைக்க வேண்டும்.
அழுத்தி துடைக்காதீர்கள். அதிலும் தலையை அழுத்தவேக்கூடாது.

குளித்தவுடன் கண்,காதின் உள்ளே,வெளியெ.மூக்கின் உள்ளே,கால் விரல்கள் எல்லாம் பஞ்சினால் துடைக்க வேண்டும்.
உடனே சட்டையை போட்டு விடுங்கள். பவுடர் எல்லாம் போடாதீர்கள். நல்லது கிடையாது.எந்த ஒரு வாசனை பொருட்களும் வேண்டாம்.சோப் கூட சாதாரண பேபி சோப் போதும்.

couche மாற்றும் போது எல்லாம் நன்றாக தண்ணீரால் சோப்பு போட்டு கழுவி விட்டு  மாற்றுங்கள்.

நகம் வெட்ட வேண்டும் என்றால் குளித்தவுடன் வெட்டுங்கள்.
அடுத்த முறை பார்ப்போம்
copyright©Feb2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts