உருளைக்கிழங்கு ரப்பே/Pomme de terre Rapée

      





இது ஸ்யேத் எத்தியனில்(St.Etienne)
உருளைக்கிழங்கில் செய்வது.

       லுவார் நதியின் கரை ஓரம் ஓட்டலில் இதுவும் சல்லாதும்,சிறு மீன் பொரித்து ஒரு முறை நாங்கள் சாப்பிட்டோம். மிகவும் நன்றாக இருந்தது.

       உருளைக்கிழங்கு ரப்பே செய்யலாமா?

தேவை:

  • உருளைக்கிழங்கு 1/2 கிலோ
  • முட்டை 1
  • வெங்காயம் 1
  • பூண்டு 2 பல் நசுக்கியது
  • பார்ஸிலி இலை
  • மைதா மாவு
  • உப்பு
  • மிளகுத்தூள்


செய்வது எப்படி?

1)உருளைக்கிழங்கு தோலை சீவி விடவும்.

2)வெங்காயத்தை பொடியாக அரியவும்.

3)தோலை சீவி வைத்து இருக்கும் உருளைக்கிழங்கை துருவிக்கொள்ளவும்




4)துருவிய உருளைக்கிழங்கு,அரிந்த வெங்காயம்,பூண்டு, பார்ஸிலி,உப்பு,மிளகு,




இத்துடன் முட்டையை உடைத்து ஊற்றவும். நன்றாக பிசையவும்.




5)இதில் இப்பொழுது தண்ணீர் விடும்.

6)அதில் மைதா மாவை போடவும்.




7)பிசையவும். மாவு தளத்தளப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.



8)தோசைக்கல்லை அடுப்பில் வைத்து,கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை கல்லில் ஊற்றவும். ஊற்றிய மாவை மெதுவாக கரண்டியாலையே மெல்லியதாக ஆக்கவும்.




9)மெல்லியதாக ஆக்கிய கிரிக்கின் மேல் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.சிவக்க விடவும்.

10)ஒரு பக்கம் சிவந்தவுடன்,மறுப்பக்கம் திருப்பி போடவும்.
திருப்பி போட்டு மீண்டும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.


11)இன்னொரு பக்கம் சிவக்க வைக்கவும்.




சிவந்ததும் எடுத்து விடவும்.


மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு ரப்பே இதோ



copyrightMai2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts