கீரை கேக்/cake au épinard




இது இனிப்பு கேக் கிடையாது.

தேவையானவை :

  • மைதா 180 கிராம்
  • பேகிங் பவுடர் 1 டீஸ்பூன்
  • முட்டை 3
  • பால் 100 மில்லி
  • எண்ணெய் 100 மில்லி
  • டூனா மீன் டின் 1
  • பாலைக்கீரை 100 கிராம்
  • துருவிய சீஸ் 50 கிராம்
  • உப்பு
  • மிளகுத்தூள்


செய்யலாம்:

1)அவணை 180° முற்சூடு செய்யவும்.

2)மைதாவையும் பேக்கிங் பவுடரையும் சலிக்கவும்.

3)முட்டையை உடைத்து ஊற்றி  அடிக்கவும்.

4)அதிலேயே பாலை ஊற்றி அடிக்கவும்.

5)அந்த கலவையிலேயே எண்ணெய் ஊற்றி அதையும் அடிக்கவும்.




6)எல்லாவற்றையும் அடித்த பிறகு, அதில் சலித்து வைத்துள்ள மாவை அதில் போட்டு கலக்கவும்.




7)மாவு நன்றாக கலந்த பிறகு,அதில் டூனா மீனை அதில் கலக்கவும்.




8)டூனா மீன் அதில் கலந்ததும், அதிலேயே, அரைத்து வைத்துள்ள பாலைக்கீரையை போட்டு நன்றாக கலக்கவும்.



9)அதுவும் நன்றாக கலந்த பின்பு துருவி வைத்துள்ள சீஸ்ஸை போட்டு கலந்து விடவும்.

10)கலந்து விட்ட மாவை கேக் மோல்டில் ஊற்றி அவணில் வைக்கவும்.




11)அவணில் வைத்த கேக்கை 40 - 45 நிமிடங்கள் வேகவைத்து வெந்ததும் வெளியே எடுக்கவும்.



இதனை நீங்கள் Pique Nique/பிக்நிக்கிற்கு கூட எடுத்து செல்லலாம்.



இது சுடாக சாப்பிடுவதை விட ஆற விட்டு வெட்டி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.




இதில் நீங்கள் தேவை என்றால் வெங்காயம் வதக்கி போட்டுக்கொள்ளலாம். மசாலா போட்டு செய்து கொள்ளுங்கள்

copyright©Mai2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts