தாய்மை அனுபவம் 20


     


     இப்போது நம் பிள்ளைக்கு 1 வயது முடிந்து விட்டது.
அதற்க்குள் ஒரு ஆண்டு ஓடி விட்டது. நம்பவே முடியவில்லை.
ஒரு வயது வரை போட வேண்டிய எல்லா தடுப்பு ஊசிகள் எல்லாம் போட்டு விட்டீர்களா?

       அதவாது பி.சி.ஜி,போலியோ,முத்தடுப்பு ஊசி,தட்டம்மை ஊசி இதை எல்லாம் போட்டு விட்டீர்களா?

       இதை எல்லாம் மருத்துவரிடம் கேட்டு போட்டு விடுங்கள். இங்கு பிள்ளைகள் பிறந்ததும் ஒரு புத்தகம் கொடுத்து விடுவார்கள்; அதில் பிள்ளை பிறந்தது முதல் நாள் தொடங்கி அதன் உயரம்,எடை. என்ன தேதியில் என்ன ஊசி போட்டோம்?எல்லா விவரமும் இருக்கும்.

இது போகட்டும். நம் நாட்டில்,
அந்த நாளிலிலே என் அம்மா, எனக்கு ஒரு நோட்டு போட்டு எனக்கு சின்ன பிள்ளையில் என்ன என்ன மருந்து கொடுத்தார்கள்? என்ன மார்க் பால் டின் பயன் படுத்தினார்கள்? என்று எழுதி வைத்து இருந்தார்கள். எல்லாமே ஒழுங்காக சொல்லுவார்கள். வயதான பின்பு குணம் கெட்டது வேறு கதை.

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், அப்படி ஒரு புத்தகம் இல்லாமல் இருக்கும் நாடுகளில் நீங்களே ஏன் ஒரு நோட்டில் பிள்ளையின் பெயரை எழுதி அதன் விவரங்களில் எழுதி வைத்தால். மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் மருத்துவரிடம் சொல்லுவதுக்கூட எளிதாக இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு ஜுரம் எப்படி கண்டு பிடிப்பது?
சதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை  36.7C  (98F)

ஜுரத்தின் தொடக்கம் 37.2C (99F)

ஜுரத்தினை பிள்ளைகளுக்கு அளவிட ஆசன வாய்தான் நல்லது.

     இப்போ ஒரு வயதுக்கு பிறகு குழந்தைகள் நன்றாக நடக்க ஆரம்பிக்கும். கை பிடித்து நடந்த குழந்தைகள் ஒரு வயதுக்கு பிறகு தனியாக உட்கார்த்து எழுந்திரிப்பது.தானாக வேகமாக நடப்பது. எல்லாம் நடக்க ஆரம்பம் ஆகும்.

     அதுப்போலவே ஒவ்வொரு வார்த்தைகளாக பேசிக்கொண்டு இருந்தவர்கள்,ஒரு இரு வார்த்தைகள் சேர்த்து ஒரு வாக்கியமாக சேர்த்து பேச ஆரம்பிப்பார்கள்.

     பிள்ளைக்கு இந்த வயதில் கூஷ் பழக்கத்தை எடுக்க வேண்டும். Potty/Pot பழக்கத்தை கொடுக்க வேண்டும்.


      காலையில் எழுந்தவுடன் கூஷ்ஷை கழற்றி விட்டு சிறிது நேரம் போவில் உட்கார வைக்க வேண்டும்.

      இதனை விளையாட்டாக கொண்டு வரவேண்டும்.கதை சொல்லிக்கொண்டே அதில் உட்கார வைக்கலாம். விளையாட்டு சாமான்கள்,கதைப்புத்தகங்கள் வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டிக்கொண்டே போவில் உட்கார வைத்து பழக வேண்டும். 

     வற்புற்த்தக்கூடாது. விளையாட்டாகவே கற்றுக்கொடுத்தால்,குறுகிய நாட்களிலேயே ஒழுங்காகி விடுவார்கள்.

     இரவு தூங்குவதற்க்கு முன்பும் இப்படியே செய்து விட்டு, தூங்க வைக்க வேண்டும்.

     நாம் Potty/Pot பழக்கத்தை பழக பழக, அவர்களே நம்மை கேட்க தொடங்கி விடுவார்கள்.
   
 நடு வீட்டில் உட்கார வைத்து பழகாதீர்கள். முடிந்தால் உங்கள் வீட்டு டாய்லட் அல்லது குளியல் அறை. அதுவும் இல்லை என்றால் ரூம்மிலாவது செய்ய பழகுங்கள்.

     இல்லையென்றால்,யாராவது விருந்தினர் வந்து இருக்கும்போது நடு வீட்டில் செய்தால் நன்றாக இருக்காது.

     14 மாதத்தில் இருந்து பிள்ளைகள் நிறைய வார்த்தைகள் நம்மிடமிருந்து கற்றுக்கொண்டு அதையே நம்மிடம் திருப்பி கூறுவார்கள். 

     அதனால், அவர்களிடம் நிறைய பேசுங்கள். நிறைய விளக்கங்கள் கொடுங்கள். சின்ன பிள்ளைகள் இவர்களுக்கு புரியாது என்று நினைக்காதீர்கள்.அவர்கள் வயதுக்கு நீங்கள் இறங்கி போய் விளக்கம் கொடுங்கள்.

     இந்த வயதில் பிள்ளைகள் நிறைய ஆராய்ச்சி செய்வார்கள். பத்திரமாக இருக்க வேண்டும். அவர்களின் ஆராய்ச்சி ஆபத்தில் கூட முடியலாம். கண்காணிப்பு அவசியம்.

     கண்டிப்பு அவசியம் தேவை. அதற்க்காக அடி, உதை,சூடு போடுவது. இது எல்லாம் கூடாது.

      சில சமயம் மெதுவாக அடிக்கலாம். மிகமிக அவசியம் இருந்தால் மட்டுமே.மற்றப்படி அன்பு மட்டுமே போதும்.

     விளக்கம் கொடுங்கள். புரியும்படி எடுத்து சொல்லுங்கள். புரிந்துக்கொள்ளுவார்கள்.

     உலகில் உள்ள எல்லா பிள்ளைகளும் புத்திசாலிகள். உலகில் உள்ளதை நாம் தானே அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அது நம் கடமை அல்லவா?

      அவர்கள் அடம் பிடிக்கும் நேரத்தில்,கொஞ்சம் விட்டு பிடியுங்கள். ஆனால், அவர்கள் கேட்டதை உடனே கொடுத்து விடாதீர்கள். அதே பழக்கம் வந்துவிடும்.

     கடைக்கு சென்றால் குழந்தைகள் எதையாவது கேட்டு அடம் பிடிக்கும்.

     பிள்ளை கேட்டு விட்டது என்று எப்போதும் வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பது அதன் எதிர்க்காலத்துக்கு ஆபத்து.
வாழ்க்கையில் அதற்க்கு ஏதாவது அது எதிர்ப்பார்ப்பது கிடைக்கவில்லை என்றால், அதனை அந்த பிள்ளை தாங்காது. 

      இதனை, நிறைய பெற்றோர் இன்று மறந்து விட்டனர். இல்லை என்று சொல்வது கிடையாது. இதனால், பல பின் விளைவுகள் வரும். இனியாவது யோசிப்பீர்களா?!

      இந்த வயதில் பிள்ளைகளின் தூக்கம் குறையும்.
குறைந்தது 14 மணிநேரமாவது தூங்கவேண்டும்.
மதியம் 2 மணிநேரம் தூங்கினால் போதும்.
ரொம்போ நேரம் தூங்கினால், இரவு தூங்குவது கஷ்டம்.

     இந்த வயதில் சாப்பாடும் வேண்டாம் என்று சொல்லும் வயது.
நிறைய காய்கறிகள், பழம் என்று கொடுத்து பழகுங்கள்.

     ஒரு சிலர், என் குழந்தை சாப்பாடுதான் சாப்பிடவில்லை என்று சொல்லி , சாப்பிடும் நேரத்தில் சிப்ஸும்,பிஸ்கட்டும்,கேக்கும் கொடுக்கிறார்கள்.

     இதேயே பழகி விட்டால்,பிறகு எப்படி நல்ல உணவை சாப்பிடும்?
குழந்தைக்கு எப்படி தெரியும்,இது நல்லது. இது கெட்டது என்று!

     எப்பொழுதும் கெட்டதுதானே சுவையாக இருக்கும்!

பல பெற்றோர்கள் இப்போது எல்லாம் சிரமம் எதற்க்கு, என்று பிள்ளைகளின் இஷ்டத்திற்க்கு விட்டு விட்டு செல்லம் என்று சொல்லுகிறார்கள்.அதனால், வீணாவது பிள்ளைகளின் உடல்நிலைதான்.

     குடிக்க நிறைய தண்ணீர் கொடுங்கள். ஜூஸ் என்றால் சர்க்கரை போடமல் கொடுங்கள்.மதியம் சாப்பிடும் நேரம், இரவு சாப்பிடும் நேரம் ஜூஸ் தராதீர்கள்.சாப்பாட்டு நேரம் தண்ணீர்தான் சிறந்தது.

 இப்போதைக்கு இது போதும். பிறகு எழுதுகிறேன்.


copyright©Mai2014Kolly2wood.blogspot.com


Comments

Popular Posts