Orange cake/ ஆரஞ்சு மண கேக்






ஆரஞ்சு மணத்துடன் இருக்கும் இந்த கேக்கை செய்த்து பார்க்கலாம் வாங்க.



இதுக்கு வேண்டியது:

கேக்கிற்க்கு 
  • கேக் மாவு 115 கிராம்
  • பேக்கிங் பவுடர் ½
  • சர்க்கரை 110 கிராம்
  • எண்ணெய்  20 மில்லி
  • துருவிய ஆரஞ்சு தோல் 2 டேபுள் ஸ்பூன்
  • ஆரஞ்சு ஜுஸ் 80 மில்லி
  • காடி 1/2 டீஸ்பூன்


மிரங்/Meringue: 

  • முட்டையின் வெள்ளைக்கரு 3
  • ஐசிங் ஷுகர் 50 கிராம்
  • சர்க்கரை 50 கிராம்


ஆரஞ்சு சிரப்:

  • ஆரஞ்சு ஜூஸ் 100 மில்லி
  • சர்க்கரை 50 கிராம்
  • தண்ணீர் 50 மில்லி


Nutella

செய்ய வேண்டியது:


கேக்கிற்க்கு 

1)முதலில் முட்டையை உடைத்து வெள்ளைக்கருவையும், மஞ்சள் கருவையும் தனித்தனி பிரித்து வைக்கவும்.



2)வெள்ளைக்கருவை நுரை பொங்க அடிக்கவும்.

3)நன்றாக நுரை பொங்க அடித்தவுடன் அதிலேயே காடியையும் ஊற்றி அடிக்கவும்.

4)அதிலேயே 80 கிராம் சர்க்கரையையும் போட்டு அடிக்கவும்.
நன்றாக அடித்து முடித்ததும், தனியாக வைக்கவும்.





5)கேக் மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும்.



6)முட்டையின் மஞ்சள்கருவையும் 30 கிராம் சர்க்கரையையும் நன்றாக அடிக்கவும். 


வெளிர் நிறமாக ஆகும்வரை நன்றாக பீட்டர் கொண்டு அடிக்கவும்.





7)அடித்த பின்பு ஆரஞ்சு ஜுஸ்ஸையும் ஊற்றி பீட்ட்ரால் அடிக்கவும்.




8)கேக் மாவையும் துருவிய ஆரஞ்சு தோலையும் அதிலேயே போட்டு பீட்டரால் அடிக்கவும்.




9)வெள்ளை முட்டைகருவை பாதியை போட்டு பீட்டரால் அடிக்கவும்.
வெள்ளைக்கரு நன்றாக கலக்க வேண்டும்.





10)மீதி வெள்ளைக்கருவை இந்த கலவையில் போட்டு ஸ்பத்துலால் கலக்கவும்.

11)அடித்து வைத்துள்ள கலவையை கேக் மோல்டில் ஊற்றவும்.

12)180° முற்சூடு செய்யப்பட்ட அவணில் கேக்கை வைக்கவும்.

13)45 நிமிடங்கள் கேக்கை வேக வைக்கவும்.

14)வெந்ததும்,கேக்கை வெளியே எடுத்து,10 நிமிடங்கள் ஆற விடவும்.

15)ஆறிய கேக்கை மோல்டிலிருந்து உடைக்காமல் எடுக்கவும்.

மிரங்:

1)முட்டையின் வெள்ளைக்கருவை பனிப்போல் பீட்டரால் அடிக்கவும்.

2)பனிப்போல் அடர்த்தியாக அடித்ததும், அதில் ஐசிங் ஷுகரை போட்டு அடிக்கவும்.



3)சிறிது நேரம் சென்று சாதாரண சக்கரையையும் போடவும்.போட்டு அடிக்கவும். பனி நுரையாகவே இருக்கும். பீட்டரை நிறுத்தி விடவும்.

ஆரஞ்சு சிரப்:

ஆரஞ்சு ஜூஸ்,தண்ணீர்,சர்க்கரை எல்லாவற்றையும் ஒரு கசரோலில் போட்டு மிதமாக சுடு காட்டவும். 


கேக்கை ஸேட்டிங் செய்வது:

1)ஆறியவுடன் கேக்கை பாதியாக வெட்டி விடவும்.

2)வெட்டிய கேக்கின் மீது ஆரஞ்சி ஜூஸ்ஸை தடவி ஈரமாக்கவும்.
3)அதன் மேல் நியூத்தலா தடவவும்.

4)மீதி பாதி வெட்டி வைத்திருக்கும் கேக்கில்,ஆரஞ்சு சிரப்பை உள் பக்கமாக தடவி நியூத்தலா தடவிய கேக்கின் மீது வைக்கவும்.

5)மூடிய கேக் மீதும் ஆரஞ்சு சிரப்பை தடவவும்.

6)தடவி முடித்தவுடன்,மிரங் செய்து வைத்து இருக்கிறோம் அல்லவா?

7)அதனை எடுத்து கேக்கின் மேல் ஐசிங் செய்து அழகு செய்யவும்.



ஐசிங் செய்து அதனை கொஞ்ச நேரம் அவணில் கிரிலில் வைக்கவும்.

நிறம் மாறி கராமலாக வரும்போது உடனே எடுத்து விடவும்.

8)பிறகு குளிர் சாதன பெட்டிக்குள் வைக்கவும்.



 copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts