பத்தே த பாக்/Pâte de Pâques


இது பாஸ்க்கா திருவிழாவில் செய்யும் ஸ்ட்டர்/ Entrée




இதற்க்கு தேவையான பொருள்கள்:

  • பாத் பிரீஸே/Pâte Brisée
  • முட்டை 5
  • கொத்துக்கறி 350 - 400 கிராம்
  • வெங்காயம் 1
  • இஞ்சி 1/2 டீஸ்பூன் துருவியது
  • பூண்டு 2 பல் நசுக்கியது
  • பார்ஸிலி இலை
  • ஜாதிக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
  • உப்பு
  • மிளகுத்தூள்


செய்முறை:

1)கொத்துக்கறியை கழுவி 1முட்டை உடைத்து ஊற்றவும்,





அரிந்த வெங்காயம்,இஞ்சி,பூண்டு,மற்றும் எல்லா மசாலா சாமான்களும் போட்டு பிசைந்து வைக்கவும்.

2)மீதம் இருக்கும் முட்டையை அவித்த்,உரித்து இரண்டாக வெட்டி வைககவும்.

3)பாத்பீரிஸேவை உருட்டி போட்டவும்.

4)கொத்துக்கறியை உள்ளே வைக்கவும்.

5)கொத்துக்கறியை உருட்டி போட்ட பாத் பீரிஸேவின் நடுவில் வைக்கவும்.



6)கொத்துக்கறியின் மேலே இரண்டாக வெடிய முட்டையை வைக்கவும்.

7)பாதி மாவை கொத்துக்கறியின் மேல் போடவும்.




8)மீதி மாவையும் அதன் மேலே போட்டு உருட்டவும்.

9)மாவு நன்றாக உருட்டி முடித்த பின்பு, பத்தேவின் மேலே கத்தியால் லேசாக கோடு கிழித்ததுப்போல் செய்யவும்.

10)அதன் மேல் முட்டையின் மஞ்சள் கருவை அடித்து தடவவும்.

11)அவணை 180°யில் முற்சூடு செய்யவும்.

12)பத்தேவை அவணில் வைக்கவும்.

13)முதலில் 180°யில் 30 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, 150° யில் 15 - 20 நிமிடங்கள் வைத்து வெந்ததும் எடுக்கவும்.




14)பத்தே வெந்ததும் வெட்டி சாப்பிடவும்.


copyrightMai2014©kollywood.blogspot.com


Comments

Popular Posts