வரிக்குதிரை கேக்/Gâteau Zebré



     

இது வரி வரியாக இருப்பதால் அந்த பெயராக வந்து இருக்குமோ? அப்படியா தான் இருக்கனும்.

     இது மாதிரி கேக் எல்லாம் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த கேக்.
இது மாதிரி ஐடம் எல்லாம் பிள்ளைகளுக்கு நாம் வற்புற்த்தி கொடுக்க தேவை இல்லை. அவர்களே சாப்பிட வருவார்கள்.

தேவையாவை:

  • மாவு/selfraising flour 200 கிராம்
  • வெண்ணெய் 250 கிராம்
  • சர்க்கரை 200 கிராம்
  • முட்டை 4
  • பால் 60 மில்லி
  • சாக்லெட் பவுடர் 3 டேபுள் ஸ்பூன்
  • வனிலா எஸன்ஸ் 2 டீஸ்பூன்


செய்முறை:

1)முட்டையின் மஞ்சள் கருவையும் வெள்ளைக்கருவையும் தனித்தனியாக பிரித்துக்கொள்ளவும்.

2)வெண்ணெய்ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.

3)ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை நுரைக்க அடிக்கவும்.




4)அதிலேயே 50 கிராம் சர்க்கரையை போட்டு அடிக்கவும். வெள்ளைக்கரு நன்றாக அடர்த்தியாக இருக்க வேண்டும்.

5)வெண்ணெய்யும் மீதம் இருக்கும் சர்க்கரையும் போட்டு கீரிம்மாக அடிக்கவும்.




6)கீரிமாக அடித்த வெண்ணெய்யில் முட்டையின் மஞ்சள் கருவை போட்டு அடிக்கவும்.




அழகான கீரிமாக வரும்.

7)அழகான கீரிமில் பாதி மாவை போடவும். மாவை கலக்கவும்.
மாவை நன்றாக கலந்ததும்,

8)அதில் பாலை ஊற்றி அதையும் கலக்கவும்.





9)மாவும் வெண்ணெயும் கலந்துள்ள கலவையில் பாலும் நன்றாக கலக்கவும்.





10)மீதி பாதி மாவை பால் நன்றாக கலந்துள்ள கலவையில் போட்டு மீண்டும் நன்றாக பீட்டரால் அடிக்கவும்.





11)அதிலேயே நுரையாக அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு பீட்டரால் அடிக்கவும்.




12)மீதி இருக்கும் பாதி முட்டையின் வெள்ளைக்கருவை ஸ்பத்துலால் உடைக்கமால் போட்டு கிண்டவும்.




நன்றாக கலந்து விடவும்.

13)கலந்ததும்,இரண்டு கிண்ணத்தில் சமமாக மாவை பிரிக்கவும்.






14)பிரித்த மாவில் ஒரு கிண்ணத்தில் சாக்லெட்டை போட்டு கலக்கவும்.





மற்றொரு கிண்ணத்தில் வனிலா எஸன்ஸ் ஊற்றி கலக்கவும்.





15)அவணை 180° முற்சூடு செய்ய்வும்.

16)அவணில் வைக்கும் மோல்டில்,மாவை அடுக்கடுக்காக ஊற்றவும்.




17)ஊற்றி முடித்ததும் முற்சூடு செய்த அவணில் 45 நிமிடங்கள் வைக்கவும்.

18)வெந்ததும் வெளியே எடுக்கவும்.

10 நிமிடம் ஆறவிட்டு மோல்டிலிருந்து எடுக்கவும்.





அதனை வெட்டி பாருங்கள். அழகான வரிக்குதிரை போன்ற கேக் 






உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.
சாப்பிட்டு பாருங்கள்.



copyrightMai2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts