தாய்மை அனுபம் 21


       



15 மாததிலிருந்து  நிறைய கை வேலைகளை சொல்லிக்கொடுக்கலாம்.

கலர் அடிக்க சொல்லிக்கொடுக்கலாம். 

வாட்டர் கலர் அடிக்க சொல்லிக்கொடுக்கலாம்.

கலர் பென்சில்கள் வாங்கி கொடுக்கலாம். 

    கலர் வாங்கி கொடுத்து  பிள்ளைகள் இஷ்டத்திற்க்கு கிறுக்க விடுங்கள்.

     தாளை மட்டும் பெரியாதாக கொடுங்கள். கிறுக்கும் போது தரையிலோ, மேஜையிலோ கலர் கிறுக்கும் போது அதன் மேல் வரக்கூடாது என்று பொருமையாக சொல்லிக்கொடுங்கள்.
திட்டி,அதட்டி,அடித்து சொன்னால் அது கலர் அடிப்பது எழுதுவது எல்லாம் தடைப்படும்.

       அதன் கற்பனையை தடை செய்ய வேண்டாம்.

        முதலில் கிறுக்க விடுங்கள். அது கிறுக்கி முடித்ததும். அதுக்கூடவே நீங்கள் ஒரு தாளை வைத்துக்கொண்டு ஒரு கோலம் போடலாம். சின்ன சின்ன பொம்மை போடுங்கள். பிள்ளைகளிடம் காட்டுங்கள்.

       பிள்ளை கலர் அடித்தையும் பாராட்டுங்கள்.

      அப்படியே கலரின் பெயரையும் சொல்லிக்கொடுங்கள்.

       வாட்டர் கலர்  கொடுக்கும் போது முதலில் இருந்தே ஒரு ஒவியத்தை எடுத்துக்கொண்டால் அதன் கோடுகளிலிருந்து வெளி வராமல் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்.

      கலர் அடிப்பது, கலர் பென்சில் பிடிக்க கற்றுக்கொடுப்பது இதுதான் முதல் படி.

       கலர் பென்சில் வாங்கும் போது பெரிய சைஸ்ஸாக, மொத்தமாக வாங்கிக்கொடுங்கள். பிள்ளக்கள் கைக்களில் பிடித்து எழுத வசதியாக இருக்கும்.

       சில பிள்ளைகள் பென்சிலை வாயில் வைக்கும் பழக்கம் வரும். அந்த பழக்கம் வராமல் ஆரம்பத்திலேயே தடுத்து விடுங்கள்.

       இந்த விளையாட்டுக்கு நீங்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டும்.

      கொஞ்சம் அரிசி அல்லது பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று டம்பளர் எடுத்துக்கொள்ளுங்கள்.

      ஒன்றில் இருந்து ஒன்றுக்கு அது மாற்றி அரிசியை டம்பளரில் நிறப்ப சொல்லுங்கள்.

       பிறகு,மூன்று டம்பளரிலும் பாதி பாதியாக போட சொல்லுங்கள்.

      கொஞ்சம் கொஞ்மாக அரிசி கீழே கொட்டாமல் டம்பளரில் மட்டும் போட சொல்லிக்கொடுங்கள்.

      டம்பளர் அடியில் ஏதாவது பெரிய துணி போட்டுக்கொள்ளுங்கள்.

      இது பிள்ளைக்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு.

        என் பிள்ளைகள் காலத்தில் 2 வயதில் பள்ளியில் சேர்த்து விடலாம். இப்போது அது முடியாது

      அப்போது Petite section1/ பெத்தி செக்ஸியோன் 1(க்ரேஷ் கிடையாது). என்று இருந்தது. இப்போது அது கிடையாது. இங்கு Nursery school  3 வருடம்  என் பிள்ளைகள் படித்த காலத்தில் 4 வருடமாக இருந்தது.

     பிள்ளைகள் அங்கு போய் கஷ்ட படக்கூடாது என்று ஒன்று ஒன்றாய் நம்மால் முடிந்ததை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன்.

    தானாக சாக்ஸ் போட சொல்லி கொடுக்கலாம்.
செருப்பு போட சொல்லிக்கொடுக்கலாம்.
குளிர் பிரதேசமாக இருந்தால், ஒவர் கோட் போட சொல்லிக்கொடுக்கலாம்.
தப்பு தப்பாக போட்டால் கூட பராவயில்லை.

     இந்த வயதில் சாப்பிடுவது பிள்ளைகளுக்கு நன்றாக வரும் வயது.

இரண்டு கைகளால் டம்பளரை பிடித்து குடிக்க முடியும்.

கரண்டியையும் பிடித்து சாப்பிட முடியும்.

      சாப்பிட விடுங்கள் அவர்கள் இஷ்டத்திற்க்கு. கொஞ்சம் உணவு வீணவத்தான் செய்யும். வேலையும் உங்களுக்கு அதிகம் தான். பரவாயில்லை. பிள்ளை சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா?

      பிள்ளைகளை சாப்பிடும் நேரத்தில் எங்கும் போகக்கூடாது என்ற கட்டு படுத்துங்கள். ஓடிஓடி வந்தால் சாப்பிடுவது தடைப்படும்.

      முதலில் அவர்கள் இஷ்டத்திற்க்க்கு விட்டு விட்டு கடைசியாக நீங்கள் கொடுத்து முடியுங்கள்.

      ஏறியது 30 நிமிடம் அதற்க்கு மேல் சாப்பிட உட்கார வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஆறி அவிந்துவிடும்.

     பிள்ளைக்கும் சாப்பாட்டு மேல் வெறுப்பு வந்துவிடும்.

      முதலில் முகத்தில் பூசிக்கொண்டு மேஜை,தரையில் இரைத்துக்கொண்டுதான் சாப்பிடுவார்கள். 19,21 மாதத்திலிருந்து உங்கள் உதவி இல்லாமல் கூட சாப்பிடலாம்.




      பிறகு, நீங்கள் பழக பழக்கத்தில் சுத்தமாக 2 வயத்துக்குள் சாப்பிட பழகி விடுவார்கள்.

     இது நீங்கள் பழகும் பழகுவதில்தான் இருக்கிறது.

     நம் நாட்டில் நிறைய பேர் பிள்ளைக்கு ஊட்டுவதுதான் நல்லது என்று நினைக்கிறார்கள்.

     இது அவ்வளவாக நல்லது கிடையாது.

      அவர்களாகவே சாப்பிட வேண்டும். ஊட்டுவதுதான் பாசம் என்று சொல்லுகிறார்கள். உண்மை என்ன என்று சிந்தியுங்கள்....

      பிள்ளைகளை தானாக சாப்பிட விட்டால் அருகிலேயே ஒழுங்காக சாப்பிடுகிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

      அது எங்கு பார்த்தாலும் உணவை போட்டு வைக்கும். அதன் மேலும் பூசிக்கொள்ளும். அதனை சுத்தப்படுத்த வேண்டும்.

     ஊட்டி விட்டால் இவ்வளவு வேலை குறைக்கிறது இல்லையா?

       பிள்ளையை சோம்பேறியாக ஆக்கி விட்டு,
பிறகு, இவர்களே பிள்ளையை 4,5 வயதில் குறை சொல்ல வேண்டியது.

 "வயதாகிறது தானாக சாப்பிட தெரிகிறதா உனக்கு? வேலை இருக்கிறது எனக்கு, உனக்கு வேறு ஊட்டி விட வேண்டி இருக்கிறது” என்று.

      இது யார் தவறு? பாவம் பிள்ளைகளுக்கு திருப்பி கேட்க தெரியவில்லை.

     டி.வி முன் நிறைய நேரம் உட்கார வைக்காதீர்கள். அதே பழக்கம் வந்து விடும்.
டி.வி காட்டி சாப்பாடு கொடுப்பது கூடாது.

      கூடுமானவரை எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்.

       நீங்கள் நகரவாசிகள் என்றால் இந்த வயதில் பிள்ளைகளை உங்கள் விடுமுறை காலங்களில் ஊட்டி,கெடைக்காணல் என்று போவதை விட, அருகிலிருக்கும் கிராமங்களுக்கு அழைத்து செல்லுங்கள்

       


      அங்கு இருக்கும் மாடு, ஆடு, கோழிகளை காட்டுங்கள். எப்படி வளர்க்கிறது என்று சொல்லிக்கொடுங்கள். தொட்டுப்பார்க்க சொல்லுங்கள்.

      அங்கு இருக்கும் உயர்ந்த மரங்கள்,வயல்கள் எல்லாம் பார்க்கட்டும்.
நல்ல காற்றை சுவாசிக்கட்டும். இதுதான் பிள்ளைக்கு நல்லது.

      நீங்கள் இப்போதே கம்யூட்டரும்,டி.வியும் என்று இயந்திர வாழ்க்கையை காட்டினால். இயற்க்கை தெரியாமல் போய்விடும்.

     பிறகு, அரிசி எந்த மரத்தில் விளைகிறது என்று நம் பிள்ளைகள் கேட்டாலும் ஆச்சிரியபட தேவையில்லை.

     கிராமங்கள் இல்லை என்றால் நமக்கு ஏது உணவு? இந்த வாழ்க்கை?

      என் பிள்ளைகலுடன் நான் அடிக்கடி செல்வது கிராமத்திற்க்குதான்.
இந்தியா வந்த போதும் கிராமத்திற்க்கு சென்று வயலில் நடக்க சொன்னேன். வயலில் வேலை செய்வதை பார்க்க செய்து அது எவ்வளவு கஷ்டம் என்று விவரம் சொன்னேன்.

       இதுதான் உண்மையான சுற்றுலா.


     நிறைய நடக்க விடுங்கள். நிறைய தண்ணீர் கொடுங்கள். 2 வயது பிள்ளை குறைந்தது 1/2 கிலோ மீட்டராவது நடக்கலாம்

ஏன் என்றால் 3 வயதில் 3 லிருந்து 4 கிலோமீட்டர் நடக்கிறது.

      நடப்பது காலுக்கு நல்லது.


       நடப்பது என்றால் ஒரு நாளைக்கு நடப்பதை சொல்லவில்லை. நடைப்பயிற்ச்சியை சொல்லுகிறேன்.

       நான் இந்தியாவில் இருந்தபோது இந்த ஆட்டோ கிட்டோ எல்லாம் கிடையாது.
நாங்கள் வருட வருடம் கோடைகாலத்தில் சுற்றுலா செல்லுவோம்.

       சில இடங்களில் பஸ் வசதிகள் கூட இருக்காது. அப்போது எல்லாம் இப்போது இருப்பது போல் எங்கு பார்த்தாலும் ரோடுக்கூட இருக்காது. மாட்டு வண்டியில் கூட போய் இருக்கிறோம். சில சமயம் அதுக்கூட கிடைகாது. நடராஜாத்தான். பேசிக்கொண்டே நடபோம். நேரம் போவதே தெரியாது.

       இப்பொழுது நம் ஊரில் பிள்ளைகள் நடக்க கஷ்டப்படுகிறார்கள்.

       இங்கு,வெள்ளையர்கள் அப்படி கிடையாது. சனி,ஞாயிறு என்றால் கூட பிள்ளைககளை அழைத்துக்கொண்டு இயற்க்கை இடங்களுக்கு சென்று நடக்க தொடங்கி விடுகிறார்கள்.

       மதிய உணவு முடிந்தவுடன் இதுதான் வேலை.
இது மனதுக்கு இதமாக இருக்கிறது.

       நாம் பலவகைகளில் அவர்களை காப்பி அடிக்கிறோமே! இந்த நல்ல பழக்கங்களை ஏன் காப்பி அடிக்கக்கூடாது.

      அப்படி நடை பயணம் போகும்போது பிள்ளைக்கு சில புத்தி மதிகள் சொல்லுங்கள்.
பிளாஸ்டிக் பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது.
எச்சில் துப்பக்கூடாது.

இது மாதிரி நல்ல பழக்க வழங்கங்களை சொல்லிக்கொடுக்கலாம்.

இன்னும் சொல்லுகிறேன்

copyright©Mai2014Kolly2wood.blogspot.com


Comments

Popular Posts