என் புகுந்த மண்ணை சுற்றி பார்க்கலாம் வாங்க 1

     

என் பிறந்த மண்ணே நான் உன்னை பூஜிக்கிறேன்

நான் புகுந்த மண்ணே நான் உன்னை சுவாசிக்கிறேன்



     

      என் பிறந்த மண் இந்தியாவில் பாண்டிச்சேரி.

     என் புகுந்த மண் பிரன்ஸில் உள்ள  Saint Etienne/ஸேன்ட் எத்தியேன்.

      பெரும்பாலும்,நம் நாட்டுக்காரர்களுக்கு இந்த ஊர் தெரியாது. நான் எப்போது ஸேன்ட் எத்தியேன் என்று சொன்னாலும், லியோனா? என்று கேட்பார்கள்.

      அவர்கள் மீதும் தப்பு இல்லை.Lyon/லியோன் Paris/ பாரீஸுக்கு பிறகு 2வது பெரிய நகரம். (இப்போது லியோனா? Marsille/மர்சையா? என்ற கேள்வி நடக்கிறது.) அதன் அருகில் எங்கள் ஊர் இருப்பதால் அந்த குழப்பம்.

      என் புகுந்த ஊர் ஒரு சிறிய அழகான நகரம்.இது மலை சார்ந்த ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்களை  Stéphanois/ஸ்தேஃப்பானுவா  என்று சொல்லுவார்கள்.

     இந்த நகரத்தை சுற்றி 7 மலைகள் இருக்கிறது.அதனால்
இந்த ஊரை  ville de 7 collines/வில் 7 கொலின் என்று சொல்லுகிறார்கள் . ஐரோப்பா நாட்டிலேயே St.Etienne தான் உயர்ந்த மலைப்பிரதேசத்தில் உள்ள பெரிய நகரத்தில் 2வது நகரமாக உள்ளது.

     இது சுற்றுலா தளம் கிடையாது.ஆனாலும் பழைய கதைகள் பல சொல்லும்.

     பிராஸ்ஸிலேயே முதன் முதலில்  இரயில் தண்டவாளம் போட்ட இடம் இதுதான்.

     இங்கு நிறைய தொழிற்சாலைகள் இருந்துள்ளது. நிலக்கரி,சைக்கிள் தயாரிப்பு,துப்பாக்கி இன்னும் நிறைய தயாரிப்பு செய்து இருக்கிறார்கள். இப்போது அவை எல்லாம் இல்லை.

      இன்றும்,இங்கு Casino/கஷினோ குழுமத்தின் தலைமையிடம் இந்த நகரத்தில் தான் உள்ளது. ஏன் என்றால்? இந்த ஊரை சேர்ந்த Geoffroy Guichard/ஜெயோஃப்போரே கிஷார் என்பர் தான் இதனை முதன் முதலில் ஆரம்பிதவர்.

     



அழகிய அமைதியான நகரம். அருகிலேயே அமைதியான கிராமங்களும். சிறு சிறு நகரங்களும் இருக்கின்றது.

   
                                                            எங்கள் ஊரின் படம் 


 இரவில் எடுத்தது  பாருங்கள்.




கிறிஸ்மஸ்  சமயத்தில் பிள்ளைகள் மகிழ





நாம் மட்டும் என்ன? விதிவிலக்க?





நாமும் கண்டு மகிழ்வோம்.





copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts