சுக்கினியும் கறி உருண்டையும்








தேவையானவை:


  • சுக்கினி/courgette 1 கிலோ
  • கொத்துக்கறி 1 கிலோ
  • வெங்காயம் 3
  • பசலிக் 1 டீஸ்பூன்
  • முட்டை 1
  • உப்பு
  • மிளகு

தக்காளி சாஸ் 500 கிராம்


செய்முறை:

1)சுக்கினியை வட்டமாக வெட்டி கொள்ளவும்.

2)வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

3)தக்காளியை வேக வைத்து தோலை உரித்து அரைத்துக்கொள்ளவும்.

4)கொத்துக்கறியில் பொடியாக வெட்டி வைத்து இருக்கும் வெங்காயத்தில் பாதியை போடவும்.

5)முட்டையையும் அதிலேயே உடைத்து ஊற்றவும்.

6)எல்லாவற்றையும் நன்றாக கலந்து பிசையவும்.

7)கலந்து பிசைந்தவுடன் கொத்துக்கறியை உருண்டைகளாக ஆக்கவும்.




8)ஒரு ஏனத்தில் வெண்ணெய்/எண்ணெய் ஊற்றி கறி உருண்டைகளை போட்டு சிவக்க வைக்கவும்.




9)சிவந்ததும் தனியாக எடுத்து வைத்து விடவும்.

10)அந்த ஏனத்தில் உள்ள எண்ணெய்யிலேயே மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு சிவக்க வைககவும்.

11)வெங்காயம் சிவந்ததும்,சுக்கினியை போட்டு சிவக்க வைக்கவும்.



12)சுக்கினி சிவந்ததவுடன் தக்காளி சாஸ்ஸை ஊற்றி கறியையும் போட்டு வேக விடவும்.



13)வெந்ததும் பசலிக் இலை தூவி சோறு அல்லது பாஸ்தாவுடன் சாப்பிடவும்.


copyrightMai2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts