ஜெனுவாஸ்/Genoise






இந்த கேக் சாதரணமாக செய்வது.

இதற்க்கு தேவையானது:

  • மைதா 25 கிராம்
  • சோளமாவு 75 கிராம்
  • சர்க்கரை 125 கிராம்
  • பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
  • முட்டை 4


செய்வது :

1)முட்டையின் வெள்ளையின் கருவையும் மஞ்சள் கருவையும் தனித்தனியாக பிரிக்கவும்.

2)மாவை பேக்கிங் பவுடர் போட்டு சலித்து வைக்கவும்.

3)அவணை 180° முற்சூடு செய்யவும்.

4)முட்டையின் வெள்ளைக்கருவை நுரையாக அடிக்கவும்.





5)மஞ்சள் கருவையும் சர்க்கரையும் நன்றாக அடிக்கவும். 




சர்க்கரை கரையும் வரை அடித்து பொங்கி வரும். 




6)பொங்கி வந்ததும் அதில் அடித்து வைத்து இருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவை கொஞ்சமாக போடவும்.




உடையாமல் கலக்கவும்.

7)மாவை  முட்டை கலவையுடன் கலக்கவும்.




8)எல்லாம் கலந்து முடித்தவுடன்,




மோல்டில் ஊற்றி அவணில் வைக்கவும்.




9)25 நிமிடங்கள் அவணில் வேக வைக்கவும். 

10)10 நிமிடங்கள் ஆறிய பின்பு மோல்டில் இருந்து வெளியே எடுக்கவும்.


     

இந்த கேக் நிறைய விதத்தில் செய்யலாம். இது நிறைய வகையான கேக்களை செய்ய உதவுகிறது. போகப்போக கற்றுக்கொள்ளலாம்.

copyright©Mai2014 kolly2wood.blogspot.com



Comments