பிஸ்ஸா/Pizza


பிஸ்ஸா செய்யலாம் வாங்க!

     மொஸ்ரேலா,ஹேம்,மஷ்ரூம் பிஸ்ஸா

செய்வதற்க்கு முன்பு கொஞ்சம் நில்லுங்க பிஸ்ஸா கதை சொல்கிறேன்.

     பிஸ்ஸா என்பது 3000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்,கிரேக்கர்,ரோமர்களுக்கு ம் உண்டு களித்த ஒரு உணவாகும்.

      அவர்கள் இதனை சாப்பிடும் போது பலவகையான தானியவகைகளைக்கொண்டு செய்து சாப்பிட்டார்கள்.

      ஆனால், இது பெரிய விழா கால உணவாக இருந்தது,
அவர்கள் காலத்தில்.

     18 ,19 ஆவது நூற்றாண்டில் பிஸ்ஸா என்பது
எல்லாரும் சாப்பிடும் ஒரு உணவாக ஆனது.

     இப்போது அதுவே, உலகு எங்கிலும் பரவி, உலக உணவாக ஆகி விட்டது.
இதை செய்யவது மிகமிக சுலபம்.

     நான் இந்த நாட்டிற்க்கு வந்த போது இந்த ரெசிபியை ஆன்மரி என்பர்கள் கற்று கொடுத்தார்கள்.

எப்பொழுதோ எங்கோ நான் பார்த்த கணக்கெடுப்பு:
ஒரு வருடத்திற்க்கு ஒரு நாளைக்கு ஒரு குடிமகன் சாப்பிடும் பிஸ்ஸா:
  1. அமெரிக்காவில்  13கிலோ
  2. ஃப்ரான்ஸ்ஸில் 10 கிலோ
  3. இத்தாலியில் கிலோ
     இப்போ வாங்க ரெசிபிக்கு.

இதுக்கு தேவையான பொருள்கள்:

  • 600கிராம் மைதா
  • 2டீஸ்பூன் உப்பு
  • 10 கிராம் ஃப்ர்ஸ் ஈஸ்ட்
  • அல்லது
  • 1 டீஸ்பூன் ட்ரை ஈஸ்ட்
  • 400 மில்லி தண்ணீர்
  • 5 - 6 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்


செய்முறை:

1)முதலில் இந்த 400 மில்லி தண்ணீரில் அரை டம்பளர் தண்ணீர் மட்டும் எடுத்து, வெதுவெதுப்பா சூடாக்கி அதில் ஈஸ்ட்டை போடவும்.

2)அது ஒரு 10 நிமிடத்தில் பொங்கி வரும்.

3)மைதா,உப்பு,தண்ணீர்,ஈஸ்ட்,எண்ணெய் எல்லாம் போட்டு மாவை பிசையவும்.





  மாவு தளத்தளப்பாக இருக்க வேண்டும்.


சப்பாத்தி மாவாக இருக்கக்கூடாது.

4)பிசைந்த மாவை துணியை போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.






5)நடுவில் கொஞ்சம் உப்பி வரும்போது,திரும்பவும் பிசைந்து வைக்கவும்.
மீண்டும் துணியை போட்டு மூடி வைக்கவும்.

6)நன்றாக உப்பி வரும். உப்பி வந்ததும்,மாவை ஒன்றாக கூட்டவும். கூட்டி பிசையவும்.

7)பிசைந்து உங்கள் பிஸ்ஸா செய்யும் தட்டுக்கு தகுந்தாற்ப்போல் மாவை உருண்டையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

8)அந்த உருண்டையை உங்கள் பிஸ்ஸா தட்டுக்கு தகுந்தாற் போல் உருட்டவும்.





அது எந்த வடிவத்தில் வேண்டும்மானலும் இருக்கலாம்.

உருட்டும் பிஸ்ஸா மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடாது.

9)உருட்டிய பிஸ்ஸாவை அவணில் வைக்கும் தட்டில் வைக்கவும்.

இது தான் பிஸ்ஸாவின் பேஸ்.

10)இப்போது தக்காளி சோஸ் செய்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா?

11)அதனை பிஸ்ஸா பேஸ் மேல் ஊற்றவும். ஒரு கரண்டியால் பிஸ்ஸா முழுவதும் தடவி விடவும்.





12)அதன் மேல் உங்களுக்கு பிடித்த வகையான காய்கறிகள் அல்லது கறி போடவும்.




13)அதன் மேல் சீஸ்ஸை துருவி போடவும்.





14)அதன் மீது லேசாக ஆலிவ் எண்ணெய் ஊற்றவும்.
தெளித்தது போல் ஊற்றவும்.

15)அவணை முற்சூடு செய்யவும்..180°.

16)அவணில் செய்து முடித்த பிஸ்ஸாவை வைக்கவும். 20 - 25 நிமிடங்கள் வைக்கவும்.

17)சீஸ் உருகி இருக்க வேண்டும். ரொம்போ நேரம் வைத்தால், பிஸ்ஸா மொட மொடப்பாக ஆகி விடும். அதனால், கண்காணித்துக்கொண்டே இருக்கவும்.


லர்தோ மஷ்ரூம் பிஸ்ஸா

    * மாவு கொஞ்சம் கொழக்கொழப்பாக இருப்பதால், கையில் ஒட்டும். அதனால்,கையில் ஒவ்வொரு முறையும் மைதாவை தடவிக்கொள்ளுங்கள்.

     *அதே மாதிரி, அவண் தட்டில் பிஸ்ஸா மாவை உருட்டி வைக்கும் முன் மைதாவை தூவி விட்டு உருட்டின மாவை வைக்கவும்.

இப்போ பிஸ்ஸா ரெடி. செய்து சாப்பிட்டு விட்டு எனக்கும் பார்சல் அனுப்பி வையுங்கள்.

copyrightMai2014©kollywood.blogspot.com


Comments

Popular Posts