அன்னாசிப்பழ கேக்/Gâteau à l’ananas

      



ஒரு முறை நான் எனக்கு தெரிந்தவர் வீட்டிற்க்கு  திடீர் என்று போக வேண்டியதாகி போய்விட்டது.

     நான் இன்னும் 2,3 மணி நேரத்தில் உங்கள் வீட்டிற்க்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு,சென்றேன்.

     அப்போது அவர்கள் வீட்டில் சுடச்சுட செய்து வைத்து இருந்தார்கள்.
அப்புறம் நாங்கள் பேசிப்பேசி கேக்கை ஆறி, ஆற வைத்து சாப்பிட்டோம்.

     அதைதான் இப்போது உங்களுக்கு சொல்லிக்கொடுக்க போகிறேன்.


இதற்க்கு தேவையானது:
  • Faine/மைதா  180 gm/ கிராம்
  • Beurre fondue/வெண்ணெய் 100 gm/ கிராம்
  • sucre/சர்க்கரை 150 gm/ கிராம்
  • oeuf/முட்டை 4
  • levure chimique/பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
  • Boîte de ananas/அன்னாசி பழ டின் 1


கராமல்

செய்முறை:

1)கராமல்/caramel செய்து வைத்து கொள்ளவும்.

2)வெண்ணெய்யை உறுக்கி வைத்துக்கொள்ளவும்.

3)முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளவும்.

4)oeuf et sucre/முட்டையையும் சர்க்கரையையும் நன்றாக அடித்துக்கொள்ளவும்.




5) அதிலேயே உறுக்கிய Beurre fondue/வெண்ணெய்யையும் போட்டு கலக்கவும்.




6)அதிலேயே Farine/மைதாவையும் போட்டு கலக்கவும்.




7)கேக்கை ஊற்றும் moule/தட்டில் முதலில் செய்து வைத்து இருக்கும்
caramel/கரமலை 5  c. à . t/மேஜைக்கரண்டி  ஊற்றி தட்டு முழுதும் அடியில் மட்டும் வரும்மாறு செய்யவும்.

8)கராமலின் மேல் டின்னில் உள்ள ananas/அன்னாசிப்பழத்தை வைக்கவும்.




பழத்தின் மீது melanger/கேக் கலவையை ஊற்றி  விடவும்.



9)Four/அவணை 200° prechauffer/முற்சூடு செய்ய வேண்டும்.

10)முற்சூடு செய்த அவணில் கேக்கை வைக்கவும்.

11)Four/அவணை 180° ஆக ஆக்கி 40 - 45mn/ நிமிடங்கள் வைக்கவும்

வெந்ததும் கேக்கை வெளியே எடுக்கவும்.


12)கேக்கை உடைக்காமல் தட்டிலிருந்து வெளியே எடுக்கவும்.Démouler le gâteaux.

அதன் மேல் jus d'ananas/அன்னாசிப்பழம் ஊறிய டின்னில் உள்ள சர்க்கரை தண்ணீரை ஊற்றவும்.

13)லேசாக ஊற்றினால் போதும். 3 - 5/குழிக்கரண்டி போதும்.



ஆறியதும். குளிற வைத்து சாப்பிடுங்கள்.  

copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts