வியட்நாம் ஸோஸிஸ் (Gio lua)



    

      இது ரொம்போ நாளா நான் செய்ய ஆசைப்பட்டது.

      இது இவ்வளவு சுலபமா இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை.

      நீங்களே செய்து பாருங்களேன்.

வேண்டிய பொருள்கள்:

  •  கோழி கறி 500 கிராம்
  • உருளைக்கிழங்கு மாவு அல்லது சோளமாவு 1 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை 2 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் 1/2 டீஸ்பூன்
  • மீன் ஸாஸ் 2 மேஜைக்கரண்டி
  • மிளகு 1/2 டீஸ்பூன்
  • உப்பு வேண்டாம்.


செய்முறை:

1)கறியில் மீன்ஸாஸ்,பேக்கிங் பவுடர்,சர்க்கரை,மிளகு,எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசையவும். 





2) கறியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.






3)உருளைக்கிழங்கு மாவை 3 - 4 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.





4)நன்றாக பிசைந்த பின்பு அதை ஒரு இரவு முழுதும் குளிர் சாதன பெட்டிக்குள் வைக்கவும்.

5)நேரம் இல்லை என்றால் குறைந்தது 3 மணி நேரமாவது குளிர் சாதன் பெட்டிக்குள் வைக்கவும்.

6)குளிர் சாதன பெட்டிக்குளிருந்து எடுத்ததும் கறியின் கொழக்கொழப்பு போய் கட்டியாக இருக்கும்.

7)ப்ளாஸ்டிக் ஷீட் சமையலுக்கு உபயோகப்படுத்துவதை எடுத்து,








அதில் பிசைந்து வைத்திருக்கும் கறியை வைத்து ரோலாக உருட்டவும்.
சுற்றி விடவும்.






8)அதன் மேல் அலுமினி ஃப்யிலில் சுற்றி விடவும்.





அதன் மேல் நூலால் கட்டி விடவும்.





9)தண்ணீர் கொதிக்க வைத்துகொதித்த பின்பு ஸோஸிஸை வைக்கவும்.

10)ஆவியில் 45 நிமிடம் வேகவிடவும்.





11)45 நிமிடம் வேகவிட்டு அடுப்பை நிறுத்தி ஸோஸிஸை எடுத்து விடவும்.
ஆறிய பின்பு பிரிக்கவும்.




வெந்த ஸோஸிஸ் ஸ்பாச் போல் இருக்கும்.

அதை நீங்கள் சல்லாதுடன் கூட ரொட்டியின் உள் வைத்து சாப்பிடலாம்.

இதை நீங்கள் கோழி கறியில் கூட செய்யலாம்.




    பொதுவாக வியட்னாமில் நிறைய பன்றி இறைச்சி பயன் படுத்துவார்கள்.
அதனால், இந்த ஸோஸ்ஸிஸ் முறையாக அவர்கள் செய்வது பன்றி இறைச்சியில் தான். 
copyrightMai2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts