Fête des voisins/ அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நட்பு பாராட்டும் விழா




      இந்த விழா பிரான்சில்  நகரபகுதியில் கொண்டாடப்படுகிறது

      இதன் நோக்கம்.இப்போதைய நாகரிகத்தில் வாழும் நாம், பக்கத்து அப்பார்ட்மென்டில் யார் இருக்கிறார்கள் என்றுக்கூட தெரியாமல் இயந்திர வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறோம் அல்லவா? அதில் இருந்து விடுப்பட்டு அண்டை அயலாரை புரிந்துக்கொள்ளவே இந்த விழா கொண்டாட படுகிறது.

       இது 1999 இல் பாரிஸ்ஸில் தனி ஒருவரால் கொண்டாடப்பட்டது.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிராஸில் இருக்கும் நகரசபையே எடுத்து செய்கிறது. அத்துடன் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியும் வேண்டும்


       இப்போது நிறைய நாடுகளில் கொண்டாட தொடங்கி இருக்கிறார்கள்.

      இதனை கொண்டாடும் நாள் மே மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அல்லது ஜூன் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடுவார்கள்.ஏறக்குறைய இந்த நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.மாலை நேரம் இந்த விழா தொடங்கும்.


இந்த வருடம்  நாளை 22/05/14 கொண்டாடுகிறார்கள்.

      2007 ல் இந்தியாவிலிருந்து திரும்பிய நான் மிகுந்த நோயில் விழுந்தேன்.

      இதனை பார்த்த என் நண்பர்கள், நீ உன் சிந்தைகளை வேறு விதமாக மாற்று என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

       அந்த நேரத்தில்தான் இந்த விழா வந்தது.
அப்போது,என் நண்பர்கள் கேட்டார்கள். நீங்கள் இருக்கும் வீட்டு பகுதியில் இந்த விழா கொண்டாடுகிறார்களா? என்று கேட்டார்கள்.

       நான் இல்லை என்று சொன்னேன். உடனே, அவர்கள்  நீ ஏன் அந்த விழாவை எடுத்து செய்யக்கூடாது என்று கேட்டார்கள்.

       அவர்கள் கேட்டதும்,எனக்கும் ஒரு மாற்றம் தேவை என்று நினைத்து சரி செய்யலாம் என்று நினைத்தேன்.

     எங்கள் வீட்டு பக்கதில் குடியிருக்கும் சிலரிடம் நாம் இந்த விழாவை கொண்டாடலாமா? என்று கேட்டேன். அவர்களும் சரி என்று கூறினார்கள்.

      எல்லாரிடமும் உத்தரவு வாங்கி விழாவை கொண்டாடினோம்.

விழாவை கொண்டாடுவது எப்படி என்று கேட்கிறீர்களா?

கெட் டு கேதர் மாதிரி தான்.

       எல்லாரும் அவர் அவர்களின் வீட்டிலிருந்து ஒவ்வொரு சாப்பாடு,ஜூஸ்,கேக்  எல்லாம் எடுத்து வர வேண்டும். எல்லாரும் நாங்கள் குடியிருக்கும் இடத்தின் அருகிலேயே ஒரு இடத்தில் ஒரு மேஜையை போட்டு எல்லா உணவுகளையும் வைத்து விடுவோம்.

     எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே சாப்பிடுவோம்.

     பெரியவர்கள் தனியாக பேசிக்கொண்டு இருப்பார்கள். பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்

      இளம் வட்டங்கள் வேண்டும் என்றால் இசை வாத்தியங்கள் எடுத்து வந்து வாசிக்கலாம்


           முதல் வருடமே நல்ல வரவேற்பு இருந்தது.

      வருடா வருடம் ஆட்களின் எண்ணிக்கை அதிகம் ஆக ஆரம்பித்தது.
வெளியில் பார்த்தாலும், ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ள ஆரம்பித்தோம்.


   இதற்க்கு தானே ஆசைப்பட்டேன். மனிதர்க்கு மனிதர் பேசுவது எத்தனை இனிமை.


    இப்படியே நாங்கள் வாங்க பழகலாம் என்று பழகிக்கொண்டு  இருக்கிறோம்.



   என்ன நீங்களும் கொண்டாட போகீறிர்களா? 

 போய் கொண்டாடுங்கள்.

நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள் என்று 

உங்கள் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.



copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts