குருவி கூடு கேக்/Charlotte de pâques



     

     இந்த கேக் இந்த வருடம் பாஸ்கா திருவிழாவின் போது செய்தது.

     இது மாதிரி செய்யும் கேக்கிற்க்கு ஷர்லோத் என்று சொல்வார்கள்

     இதற்க்கு அடுப்பு வேண்டும். ஆனால் அவண் தேவை இல்லைஆனால் அவண் தேவை. ஏதோ புரியுதா? படிங்க புரியும்.

தேவையான பொருள்கள்:

பேஸ்/Base:

  சாக்லெட் மூஸ்/La mousse aux chocolat :
  • டார்க் சாக்லெட் 100 கிராம்
  • மில்க் சாக்லெட் 100 கிராம்
  • வெண்ணெய் 40 கிராம்
  • முட்டை 5
  • சர்க்கரை  2 டேபிள் ஸ்பூன்

 கீரிம் ஷாந்திலி/Crème chantilly :
  • கீரிம் லிக்விட் 150 – 200 மில்லி
  • ஐசிங் சுகர் 2 டேபிள் ஸ்பூன்

 அழகு டுத்த/Decoration:
  • சாக்லெட் முட்டைகள்


வாங்க ஒண்ணு ஒண்ணா செய்து ஷர்லோத்தை செய்யலாம்.

முதலில் சாக்லெட் மூஸ் செய்துக்கொள்ளலாம்.

சாக்லெட் மூஸ்/La mousse aux chocolat  :

1)முதலில் டார்க் சாக்லெட்டையும் மில்க் சாக்லெட்டையும் டபுள் பயிலர் முறையில் உருக்கவும்.




2)உருகி வரும் போது வெண்ணெய்யை போட்டு கலந்து உருக்கவும்.

3)எல்லாம் உருக்கியதும் எடுத்து வைத்துவிடவும். ஆறவிடவும்.

4)4 முட்டையின் வெள்ளை கருவையும்,5 மஞ்சள் கருவையும் தனித்தனியாக பிரிக்கவும்.

5)முட்டையின் வெள்ளையின் கருவை நுரை பொங்க அடிக்கவும். பனிப்போல் வந்ததும் 1டேபிள் ஸ்பூன் சர்க்கரையை போட்டு
முட்டையை அடிக்கவும்.



6)முட்டையின் மஞ்சள் கருவையும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை போட்டு  அடிக்கவும். 

7)அடிக்க அடிக்க சர்க்கரை கரைந்து ஒரு மாதிரி வெள்ளை கலர் கிடைக்கும். அப்பொழுது நிறுத்தி விடவும்.

8)அடித்து வைத்த முட்டையின் மஞ்சள் கருவில் உருக்கி வைத்த கொஞ்சமாக ஆறி இருக்கும் சாக்லெட்டையும் அதில் கலக்கவும்.

9)இதில் சாக்லெட் நன்றாக கலந்ததும், பனிப்போல் நுரைப்பொங்க அடித்து வைத்து இருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவை 




இதில் மெதுமெதுவாக உடைக்காமல் கலக்கவும்.



10)இதனை கலந்து முடித்ததும், குளிர் சாதன பெட்டிக்குள் குறைந்தது 3 மணி நேரம் வைக்கவும்.




பேஸ்/Base:

1)இப்போ நீங்க எந்த தட்டில் கேக்கை பிரஸ்ன்ட் பண்ண போகிறீர்களோ, அதில் தான் இதை வைக்க வேண்டும்.

2)வட்டமான மோல்டு தட்டில் வைக்கவும். Genoise/ழேனுவாஸ்ஸை  வைக்கவும்.

3)கேக்கை சுற்றி  ஸ்பாஞ் ஃப்பிங்கர் பிஸ்கெட்டை இப்போது நாம் வைக்க போகிறோம்.

4)ஸ்ட்ராங் காபி போட்டு வைத்து இருக்கிறோம் அல்லவா? அதை ஒரு தட்டில் ஊற்றிகொள்ளுங்கள். அதில், பிஸ்கெட்டின் முதுகுபுறம் லேசாக காபியில் நனைத்தால் போதும். 

5)காபியில் நனைத்த பிஸ்கட்டை கேக்கை பிஸ்கெட்டின் முன்புறம் வெளியே தெரியும்படி வைக்கவும். சுற்றி வைக்கவும்.


6)கேக்கை சுற்றி பிஸ்கெட்டை வைத்து முடித்த பின்பு கேக்கின் உள் பக்கமும் மிச்சம் இருக்கும் காபியை பிரஸ்ஸை வைத்து நன்றாக ஈரப்படுத்தவும்.



7)குளிர்சாதன பெட்டிக்குள் வைத்துள்ள சாக்லெட் மூஸ்ஸை இதனுள் வைக்கவும்.நிறவி விடவும்.



8)குளிர்சாதன பெட்டிக்குள் குறைந்தது 12 மணி நேரம் வைக்கவும்.



     அப்பொழுதுதான் நன்றாக ஊறி ருசி கொடுக்கும். எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு ருசி.

கீரிம் ஷாந்திலி/Crème chantilly  :

1)கீரிம் எடுத்து பீட்டரால் அடிக்கவும். 

2)கீரிம் பூத்து வரும்போது ஐசிங் ஷுகர் போட்டு அடிக்கவும்.

     இது ரொம்போவும் அடிக்க கூடாது வெண்ணெய் எடுத்து விடுவோம்.

முடிவு :

1)12 மணி நேரத்திற்க்கு பிறகு  குளிர்சாதன பெட்டிக்குள் வைத்த ஷர்லோத்தை எடுத்து கீரிம் ஷாந்திலியை வைக்கவும்.



2)மீண்டும் குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கவும். குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும்.

3)சாப்பிடும் நேரத்தில் மோல்டை மெதுவாக எடுக்கவும்.

மோல்டை எடுத்த பின்பு ஷர்லோத்தை  சாக்லெட் முட்டை, சர்க்கரை முட்டை கொண்டு அழகு  படுத்தவும்.

    இது முதல் நாளே செய்யும் கேக்.

    இது சாதரண கேக்கை விட கஷ்டமானதுதான். வேலை அதிகம். சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ரிச் கேக்.


copyright©Mai2014 kolly2wood.blogspot.com

Comments

Popular Posts