தாய்மை அனுபம் 19


    இந்த முறை நான் சொல்ல போவது பிள்ளைகளின் குறைகளை  எப்படி நிறை செய்வது என்பது பற்றிதான்.

     சில பிள்ளைகள் சில குறைகளுடன் பிறக்கலாம். இதனை பற்றி பார்க்கலாம்.

     இதுவும் முதலிலேயே கவனித்து விட வேண்டும். நாள் கடத்த கூடாது.

     கேட்கும் திறன் மட்டுமே இல்லாமல் பிறந்த குழந்தைகள் பேசமால் இருக்கலாம்.

     இதனை 4 மாத பிள்ளையாய் இருக்கும் போதே கண்டு பிடிக்கலாம்.
மிக சுலபமான வழி ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.

     பிள்ளையின் காது  அருகில் விரல்களால் சொடிக்கு போட்டு பாருங்கள். பிள்ளை திரும்பி பார்க்க வேண்டும்.

     அதுவும் இல்லை என்றால்,மிதமான பாட்டு பாடும் விளையாட்டு பொருளை காது அருகில் வைத்து பாருங்கள்.

      அந்த சப்தம் கேட்டதும்  கண்கள் ஒசை வந்த திசையை பார்க்கும் அல்லது பிள்ளை திரும்பி பார்க்க வேண்டும்.

     இப்படியே திரும்ப திரும்ப செய்து பாருங்கள். குழந்தை தலையை திரும்பி பார்க்கவே இல்லை என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டால், உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

     காதுக்கு சிறு வயதிலேயே அறுவை சிகிச்சை செய்துக்கூட ஒழுங்கு படுத்த வாய்ப்புகள் இருக்கலாம்.

      சில பிள்ளைகளுக்கு ஒரு காது மட்டும் அறுவை சிகிச்சை செய்தாலே போதும் என்றும் சொல்லுகிறார்கள்.

     அறுவை சிகிச்சைக்கு பின், பெரும்பாலும் இவர்களுக்கு கேட்டும் திறன் வந்துவிடும்.  இவர்கள் அதனால் பிறர் பேசுவதை புரிந்துக்கொள்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சும் வர வாய்ப்பு உள்ளது.

      அதுப்போலவே, கேட்கும் திறனும்,பேசும் திறனும் இல்லாத குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சை செய்வதும் அவசியம்.

     அவர்களுக்கு செய்கை பாஷை சொல்லி கொடுப்பது அவசியம். இது அவரிகளிடம் பேச வசதியாக இருக்கும். 2 வயது குழந்தை கூட அழகாக செய்கை பாஷை பேசும்.

     இவை எல்லாமே நம் குழந்தைகளின் எதிர்க்கால நலம் கருதியே நாம் செய்ய வேண்டும். அவர்களின் உடல்நலம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


     கண் பார்வை குழந்தைக்கு பிறந்த அன்றே உடனே தெரியாது. 
ஒரு சில நாட்கள் ஆகும். இது இயற்க்கை. 

     பிறந்து சில நாட்கள் ஆனதும் சோதிக்க பார்க்க வேண்டும். பெரும்பாலும் மருத்துவரே இதை எல்லாம் பார்பார். இருந்தாலும், நானும் சொல்கிறேன். 

     டார்ச் ஒளியை கண்களின் அருகில் அப்படியும் இப்படியுமாக கட்டவும். பிள்ளை கண்ணை திருப்பி பார்க்கும். அப்படி பார்த்தால் கண் பாதிப்பு எதுவும் இல்லை என்று அர்த்தம்.

     நீங்கள் கண்களில் காட்டும் ஒளி கண்களை கூசும் ஒளியாக இருக்க கூடாது.

     கண் பார்வையை பொறுத்தவரை பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகதான் தெரிய ஆரம்பிக்கும்.

     அதனால்தான் பிள்ளைகளை தனியாக அனுப்பக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.

     ஒரு பிள்ளைக்கு சரியாக பார்வை வருவது 10 வயதில்தான். அதுவரை அதற்க்கு சரிவர பார்வை தெரியாது.

     அதாவது,நேராக அதனால் பார்க்க முடியும். பக்கவாட்டில் உள்ளதை அதனால் பார்க்க முடியாது. பக்கவாட்டில் உள்ளதை தலையை திருப்பித்தான் பார்க்க முடியுமே தவிர நம்மை போல அவர்களால் தலையை திருப்பாமலே பார்க்க இயலாது. 

     அதனால்தான், ஒரு 9,10 வயதுள்ள பிள்ளைகளை தனியாக ரோடு கடக்க முயற்ச்சிக்க விடக்கூடாது என்று சொல்வது. 

     தனியாக அனுப்ப கூடாது என்று சொல்வது.10 வயதுக்கு மேல் அவர்களுக்கு பார்வை நன்றாக நாம் பார்ப்பது போல் வந்து விடும். கவலை இல்லை.


      எனக்கு தெரிந்த ஒரு குடுபத்தில் 4 பிள்ளைகள், அதில் 1 பிள்ளைக்கும் அந்த பிள்ளைகளின் அம்மாவிற்க்கும் மட்டுமே கண் தெரியும். மற்ற 4 பேருக்கும் கண் தெரியாது.

     அந்த பிள்ளைகளை பார்வை இல்லாதவர்கள் என்ற குறையே சொல்லமுடியாது.

     அந்த  வீட்டில் பிள்ளைகள் எல்லாம் சாதாரணமான பள்ளியில் தான் படித்தார்கள். தனியாகவே நாடு விட்டு நாடு போவர்கள்.

இன்று, ஒருவன் போலிஸில் மொழி பெயர்ப்பாளன் அவனுக்கு ஏறக்குறைய 10 மொழிக்கு தெரியும்.

     ஒருவன் கம்யூட்டர் என்ஞினியர், 5 இசை வாத்தியங்கள் வாசிக்க தெரியும்,சூரிய ஒளியில் இயங்கும் சைக்கிளில் பல நாடுகள் சுற்றுகிறான்,இன்னும் பல இவனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

     ஒருத்தி psychologist.

     பிள்ளைகள் தனித்தனியாக வாழ்கிறார்கள்.  இவர்கள் வாழ்கை முறைப்படி வாழ்கிறார்கள்.

      பாருங்கள் இதுதான் பெருமை. இன்னும் பல பெருமைகள் சொல்லிக்கொண்டே போகலாம். நல்ல மரியாதையான பிள்ளைகள்.நல்ல குடும்பம்.

      உடம்பில் ஊனம் இருந்தாலும் மனதில் ஊனம் இல்லை.

      இதனை ஏன் சொல்கிறேன் என்றால்,பெற்றோர் கொடுக்கும் ஊக்கம்தான் பெரிய ஊக்கம் இவர்களுக்கு.மற்றவர்கள் எல்லாம் விட்டு விடுங்கள்.

     பெற்றோர்களே பெரும் ஊனமாக போனால் பிள்ளைகளுக்கு ஊக்கம் யார் கொடுப்பார்கள்? 

     அதனால்,நம் பிள்ளைகளுக்கு எது என்றாலும் உடனடியாக கண்டு பிடித்து அதற்க்கு தக்க மருத்துவரை பார்த்து ஆலோசனையும் சிகிச்சையும் அளிப்பது நல்லது.

     அடுத்தவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு மனதை போட்டு குழப்பிக்கொண்டு இருப்பது நல்லது கிடையாது. பிள்ளைகள் புத்திசாலிகள்.அவர்களுக்கு கொஞ்சம்  ஊக்கம் கொடுங்கள் அது போதும்.

எப்படியும் எல்லோரிடமும் ஒவ்வொரு குறைகள் இருக்கத்தான் செய்கிறது. குறை இல்லாத மனிதனை கண்டால் என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனிடம் பேட்டி காண வேண்டும்.

     குறையில்லாதவர்கள் குறையுள்ளவரைகளுக்கு முடிந்தால் ஊக்கம் கொடுங்கள். இல்லையென்றால் தயவு செய்து விட்டு விடுங்கள். அவர்களை பற்றி குறை பேசாதீர்கள். ஏற்கனவே அவர்கள் மனதாலும் உடலாலும் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.

copyright©Mai2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts