எனக்கு பிடித்த தமிழ்ப்புலவி




எனக்கு பிடித்த ஔவையாரின் பாடல் வரிகள்:

     பாடல் வரிகளுக்கு போவதுக்கு முன்பு ஔவையாரைப் பற்றி கொஞ்சம்.......

     ஔவையின் பாடல்களை என் வாழக்கையில் ஏறக்குறைய கடைப்பிடிக்க முயற்ச்சி செய்வேன். 90 சதவீதம் கடைபிடிக்கிறேன்

     இதனால் பின் விளைவுகள் நிறைய சந்தித்து இருந்ததாலும்,எனக்கு வாழ்க்கையில் உற்சாகம் தருவது இந்த ஔவையாரின் பாடல்களும்தான்.

      12ஆம் நூற்றாண்டிலேயே  நம் நாட்டில் பெண்களின் கல்வி அறிவு மேன்பட்டு இருந்து இருப்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு அல்லவா!

     பெண்கள் எவ்வளவு முன்னேறமாக இருந்து இருக்கிறார்கள் என்பதற்க்கும், தைரியமாக இருந்து இருக்கிறார்கள் என்பதற்க்கும் ஔவையார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா!

     எனக்கு என்னவோ ஔவையார் போன்றவர்கள்தான் புதுமை பெண்.உலகிலேயே நம் நாட்டில், அதிலும் தமிழகத்தில் நம் செந்தமிழில் தான் முதல் முதலில் ஒரு தமிழ் பெண் புலவர்கள் இருந்து இருக்கிறார்கள்.

    இதில் தமிழ் நாட்டிற்க்கு பெருமை அல்லவா?

     அந்த தமிழை இன்று புறக்கணிப்பதை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்த பாடல்கள் எல்லாம் எனக்கு பிடித்த ஔவையார் பாடல்கள்


நான்கு கோடி பாடல்கள்

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்

உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெரும்

கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே 
கூடுதலே கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்




பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்




உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 




நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 



அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 



தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 




கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 




கொடியது
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.

copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts