சிங்கபூர் ஜாலா

   

  இது சிங்கபூர்,மலேசியா போன்ற நாடுகளில் செய்வது இது.


    

 இதனை பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

     கறி குழம்புடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

       பிள்ளைகள் நியூத்தலா,ஜாம்முடன் சாப்பிடுவார்கள்.
இது பள்ளி விட்டு வரும் பிள்ளைகளுக்கு நல்ல டிபன். இரவு டிபன்னாகவும் சாப்பிடலாம்.

       இது செய்வதற்க்கு என்று ஒரு உபகரணம் இருக்கிறது. அதற்க்காக சிங்கார சிங்கப்பூருக்கு செல்ல முடியாத என்னை போன்றவர்கள். இதனை செய்வதை கை விட்டுவிட வேண்டாம்.

ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மூடியை கழற்றி மூடியில் மூன்று நான்கு சின்ன சின்ன துளைகள் போட்டுக்கொள்ளுங்கள். போதும்.

இப்போது ஜாலர் செய்ய அச்சு ரெடியாகி விட்டது.

செய்ய தேவைப்படும் பொருள்கள்:

  • மைதா 200 கிராம்
  • முட்டை 1
  • தேங்காய் பால் 400 மில்லி
  • தண்ணீர் 50 - 100 மில்லி
  • மஞ்சள் 1 டீஸ்பூன் மஞ்சள்
  • உப்பு 1/2 டீஸ்பூன் உப்பு
  • எண்ணெய் 2 டேபூள் ஸ்பூன்


எப்படி செய்ய போகிறோம்?

1)மைதா,தேங்காய் பால்,மஞ்சள்,உப்பு எல்லாம் போட்டு கலக்கவும்.


2)முட்டையையும் போட்டு நன்றாக கலக்கவும்.




3)இப்போது தண்ணீரையும் ஊற்றி கலக்கவும்.





4)எண்ணெய் ஊற்றி கலக்கவும்.


ஏறக்குறைய ஆப்பமாவு பதம் இருக்க வேண்டும்.


5)மாவு கலக்கும் போது நன்றாக அடித்து கலக்கவும். மிக்ஸியில் ஒரு அடி அடிக்கவும்.





ஜாலா மாவு செய்து முடித்து வைத்து விட்டோம்

6)ஒரு அரை மணி நேரம் அப்படியே வைக்க முடிந்தால், வைக்கவும். ஒரு பத்து நிமிடமாவது வைத்தால் நல்லது.

7)பாட்டிலில் மாவை ஊற்றவும்.துளைப்போட்ட மூடியை கொண்டு பாட்டிலை மூடி விடவும்.





8)ஒரு தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவவும்.


9)தோசைக்கல் சூடு ஏறியதும்,மாவு இருக்கும் பாட்டிலை தோசைக்கல்லுக்கு மேல் தலைக்கீழாக சாய்த்து பிடித்தால்,மாவு தானாக ஊற்றும்

10)தோசைக்கல்லில் மாவை இப்படியாக ஊற்றவும்.




11)திருப்பி போட வேண்டாம்.

12)மெல்லியதாக இருப்பதால் உடனே வெந்து விடுவும். வெந்ததும் எடுத்து விடவும்.




இப்போ சுட்டு எடுத்து விட்டோம்.




என்ன செய்ய போகிறீர்கள்? வந்தவர்களை சும்மாவா அனுப்ப முடியும். சாப்பிட்டு விட்டு போங்க.


சும்மா பரோட்டா மாதிரி பிய்த்து போட்டு கறிக்குழம்புடன் சாப்பிடலாம்.


copyrightMai2014©kollywood.blogspot.com




Comments

Popular Posts