பாலைக்கீரையும் கீரிமும்/Epinards à la crème fraîche



கீரையில் இரும்பு சத்து அதிகம். அதனை அதிகமாக சாப்பிடுவது நல்லது. 

தேவையானவை :

  • பாலக்கீரை 1 கிலோ
  • கீரிம்  250 கிராம்
  • வெண்ணெய் 25 கிராம்
  • பூண்டு 2 பல்
  • ஜாதிக்காய் தூள் 1/4 தேக்கரண்டி
  • உப்பு
  • மிளகுத்தூள் 
  • வெண்ணெய் 1 டேபுள் ஸ்பூன்


செய்முறை:

1)பாலக்கீரையை வேக வைத்து அரைக்கவும்.

2)வேக வைத்த பாலக்கீரையில் நசுக்கியபூண்டு,ஜாதிக்காய்,உப்பு,மிளகுத்தூள் போட்டு கொத்திக்க வைக்கவும்.





3)கீரை ஒரு கொதி வந்ததும்,அதில் கீரிமை ஊற்றி கிளறவும்.




4)இதுவும் ஒரு கொதி வர வேண்டும். வெண்ணெய் போட்டு உருகி வரவிட்டு கிண்டி விடவும்.

5)கொதி வந்த கீரையை இறக்கி வைக்க வேண்டும்.




    கீரை ரெடி.



     இங்கு பாலைகீரைக்கு அவித்த முட்டை வைத்து சாப்பிடுவது இங்கு எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.

இது விரைவாக செய்யும் உணவு வகை.


     இதனை 12லிருந்து 15 மாதக்குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் வெண்ணெய்யும் கீரிமையும் கொஞ்சமாக ஊற்றிக்கொடுங்கள். அதிகமாக ஊற்றிக்கொடுத்தால் அது பிள்ளைகளுக்கு ஒத்து வராது.

:copyright©Mai2014kolly2wood.blogspot.com




Comments

Popular Posts