திராமிசு/Tiramisu


இது இத்தாலி நாட்டு இனிப்பு வகை.

இதற்க்கு அடுப்பு அவண் தேவையில்லை

18 ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த  திராமிசுவை  செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

புத்துவார்/ biscuit a cuiller ou boudoir என்னும் பிஸ்கட்டை வைத்து இந்த திராமிசுவை செய்து இருக்கிறார்கள்.

காலப்போக்கில் இதுவே விதவிதமாக மாறி போய் இருக்கிறது.

சிலர் இப்படி சொல்வதும் உண்டு. மீந்து போன காப்பியும் பிஸ்கட்டும் வீணாகமல் இருக்க இதனை செய்தார்கள் என்றும்.

எது எப்படியோ!
நான் இப்போது நான் எப்படி திராமிசு செய்தேன் என்று சொல்ல போகிறேன்.

இதற்க்கு தேவை:

  • சர்க்கரை 100 கிராம்
  • மஸ்கார்ப்போன்/Mascarpone  500 கிராம்
  • முட்டை 4
  • திக்கான சர்க்கரை இல்லாத காபி 2 கப்
  • 40 - 45 பிஸ்கட்/Biscuit a cuiller or boudoir
  • கருப்பு சாக்லெட் பவுடர்

இப்போ செய்யும் முறைக்கு  வருவோம்:

1)முட்டையின் மஞ்சள் கருவையும் வெள்ளைக்கருவையும் பிரித்து தனித்தனியாக ஆக்கி கொள்ளுங்கள்.

2)வெள்ளைக்கருவை நுரைப்பொங்க நன்றாக அடித்துக்கொள்ளவும்.



3)முட்டையின் மஞ்சள் கருவையும் சர்க்கரையும் அடிக்கவும்.





4)அதனுடன் மஸ்கர்போனை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.





5)வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும் ஒன்றாக சேர்க்கவும். நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.





6)பில்டர் காபியாக இருந்தால் நல்லது. இல்லையென்றால், ஏதாவது ஒரு இன்ஸ்டென்ட் காபி கலந்து ஆரவைத்து கொள்ளுங்கள்.
இது ஒரு புறம் இருக்கிறதா?





7)பிஸ்கெட் சொன்னேன் அல்லவா? அதையும் ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மூன்றும் ரெடியாக இருக்கட்டும்.

  இப்போது,
8)ஒரு ஆழமான கண்ணாடி தட்டு அல்லது மூடி போட்ட ஒரு ப்ளாஸ்டிக் டப்பா எடுத்துக்கொள்ளுங்கள்.

9)அதில்,முதலில் ரெடியாக உள்ள காபியில் பிஸ்கட்டை லேசாக முக்கி எடுத்து அடுக்கவும்.
இதுதான் திராமிசுவின் அடிபாகம். தட்டு முழுவதும் வைக்க வேண்டும்.
  பாதி பிஸ்கட் முடிந்து விட்டதா

மீதி இருக்கட்டும். அப்படியே வையுங்கள்.

இப்போது,

10)கீரிம் செய்து வைத்து இருக்கிறோம் இல்லையா? அதை தட்டில் அடிக்கி வைத்திருக்கும் பிஸ்கெட் மீது பாதி போட்டு விடுங்கள்.

11)இப்பொழுது. மீண்டும் அந்த கீரிம் மீது மீதம் இருக்கும் பிஸ்கெட்டுகளை காபியில் லேசாக முக்கி எடுத்து,முன்பு எப்படி அடுக்கினீர்களோ? அப்படியே அடுக்கி விடுங்கள்.




12)மீண்டும் பிஸ்கெட் மீது மீதம் இருக்கும் கீரிமை போட்டு நிறைவு செய்து விடுங்கள்.

13)இதனை குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுங்கள்.
குறைந்தது 3 மணி நேரமாவது வைத்தால் தான் நன்றாக இருக்கும்.
முதல் நாள் செய்து அடுத்த நாள் சாப்பிட்டால் ..............
ம்ம்ம்ம்ம்ம்ம் அதன் ருசி அலாதிதான்.







14)அடுத்த நாள் சாப்பிடும் முன்பு சாக்லெட் பவுடர் தூவி விடவும்.


copyright©Mar2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts