பொலான்டா ஃபிரித்/Polenta Frite

இது வடக்கு இத்தாலியிலும்,பிராஸ்ஸில் இத்தாலி அருகில் இருக்கும்
ஸ்வ்வா /savoie போன்ற இடங்களிலும் செய்வார்கள்.
 நாங்கள் லிவுக்கு ஒருமுறை மொதான்/Modane
என்ற இடத்திற்கு சென்ற

போது முதல் முதலாக பொலான்டா சாப்பிட்டோம்.
பொலான்டா என்பது சோள ரவையில் செய்வது
சோள ரவையை இவர்கள் பொலான்ட் என்றுதான் சொல்கிறார்கள்

பிடிங்க ரெசிபிய.

தேவையானவை:
  • 250 கிராம் பொலான்ட்/Polenta
  • 750 மில்லி தண்ணீர்
  • 1/2 தேக்கரண்டி பசலிக் இலை
  • 1/2 குயூப் சிக்கன் ஸ்டாக்
  • 1/2 தேக்கரண்டி மிளக்காய் தூள்
  • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • உப்பு
  • எண்ணெய்


செய்ய ஆரம்பிக்கலாம்:

1)தண்ணீரை கொதிக்க வையுங்க.

2)சிக்கன் ஸ்டாக் போடுங்க நல்லா கரைத்து விடுங்க.

3)அது கரைந்ததும், பசலிக் இலை, மிளக்காய்தூள் எல்லாம் போடுங்க.
தண்ணீர் நல்லா கொதிக்குதா?







4)ரெடியா வைத்திருகிற ரவையை போடுங்க. கொஞ்சம் கொஞ்சமாதான். கிண்டிகொண்டே இருங்க.






5)நல்லா வெந்ததும் ஒரு தட்டில் பட்டர் பேப்பர் போட்டு அதில் கொட்டி விடுங்க.

ஒரே சமம்மா ஆக்கி விடுங்க.







6)ஆரியவுடன் ஃபிரித் மாதிரி தூண்டு போடுங்க.


 7)ஒரு தோசைக்கல் வைத்து  கொஞ்சமா எண்ணெய் ஊற்றி ஒரு ஒரு ஃபிர்த்தா போட்டு பொரித்து எடுங்க.



இது ஸோஸ் கூட வேண்டாம் அப்படியே சாப்பிடலாம். கெச்சப் வுடன் சாப்பிடலாம்.

நான் செய்த ஸோஸ் மஷ்ரும் ஸோஸ்.

சூடா இருக்குது ஃபிரித்தும் மஷ்ரும் ஸோஸ்சும். எடுத்து  சாப்பிட்டு பாருங்க


இது பெரிய தூண்டுகளாக போட்டு லஞ்ச் அல்லது டின்னராகவும் சாப்பிட்டு விடலாம்.

இது அந்த ஊரில் சாப்பாடாகத்தான் செய்கிறார்கள்.


Copyright©Mar2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts