ஸ்ட்ராபெரி மூஸ்/Strawberry Mousse/Mousse au fraise

ஸ்ட்ராபெரியில் எது செய்தாலும் எனக்கு பிடிக்கும். அதிலும் இது மூஸ் பிடிக்காமலா போகும்?






இதற்க்கு தேவையான பொருள்கள்:

  • 300 கிராம் ஸ்ட்ராபெரி
  • 125 கிராம் மாஸ்கார்போன்/Mascarpone  அல்லது  டபூள் கீரிம்/Double Cream
  • 2 அல்லது 3 முட்டையின் வெள்ளையை கரு
  • 25 கிராம் சர்க்கரை
  • 1 தேக்கரண்டி வனிலா எஸன்ஸ்

செய்முறை:

1)முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உபயோகப்படுத்தவும்.

2)ஸ்ட்ராபெரியை நன்றாக மிக்ஸியில் கூழாக அடித்துக்கொள்ளவும்.

3)முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக அடித்துக்கொள்ளவும்.




4)இன்னொரு பவுலில் மஸ்கார்போனும் சர்க்கரையும் நன்றாக அடித்துக்கொள்ளவும்.







5)அடித்து வைத்துள்ள மஸ்கார்போனில் கொஞ்சம் கொஞ்சமாக அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக்கருவை ஸ்பத்துளால்/spatule  கலக்கவும்.




 




அடித்து வைத்துள்ள ஸ்ட்ராபெரியையும் கலக்கவும்.




6)மெதுவாக எல்லாவற்றையும் கலந்ததும்,குளிர் சாதனப்பெட்டிக்குள் குறைந்தது 5 மணி நேரம் வைக்கவும்.




ஸ்ட்ராபெரி மூஸ்ஸுடன்  கீரிம் வைத்து சாப்பிடவும்.

copyright©Mar2014 Kolly2wood.blogspot.com


Comments

Popular Posts