வெள்ளை வினிகரும் என் வீடும்

     





     இந்த தலைப்பை எப்படி கொடுப்பது என்பதே பெரிய குழப்பம் போங்க. வினிகரும் நானும் என்றா? வினிகரும் வீடும் என்றா? எப்படியோ போகட்டும்

     நானும் இந்த வெள்ளை வினிகரும் ரொம்போ நகமும் சதையும் மாதிரி. அது வீட்டில் இல்லை என்றால்,எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.

       உடனே கடைக்கு ஒட்டப்பந்தயம் தான். பி.டி.உஷா எல்லாம் பிச்சை வாங்கனும் போங்க. வாங்கன மறு நிமிஷம் தான் நிம்மதியா இருக்கும். அப்படி ஒரு இது........இதுன்னா......அதுதான்......தாயா,பிள்ளையா பழகியாச்சி.

     இந்தியாவில் இருந்தவரை வினிகரை வைத்து நல்லா ஊறுக்காய் போடுவேன். ஊறுக்காய் போட்டு நானும் சாப்பிடுவேன். அடுத்தவர்களுக்கும் கொடுப்பேன். அவ்வளவுத்தான் தெரியும். 2 கலர் வினிகர் விற்கும். வெள்ளை ஒன்று, சிகப்பு ஒன்று அவ்வளவுதான். இப்போ, எப்படியோ தெரியாது.

     இங்கு வந்து பார்த்தால்!
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்து பார்த்ததுப்போல் விதவிதமாக வினிகர்.

வினிகர் சீதர்/Vinaigre de cidre , வினிகர் பல்ஸமிக்/ vinaigre de balsamique ,….,இப்படி பல விதமான வினிகர்கள்

    ஒவ்வொரு சமையலுக்கு ஒவ்வொரு வினிகர் உபயோகப்படுத்துகிறார்கள்.

     அதுப்போகட்டும். நாம் பார்க்க வந்ததை பார்ப்போம்.


     இங்கு வெள்ளை வினிகரை சமையலுக்கு மட்டும் இல்லாமல், பாட்டி காலத்திலிருந்து நிறைய வீட்டு உபயோகத்திற்கும்  பயன்படுத்தி இருக்கிறார்கள்.

     ஒரு முறை என் வீட்டிற்க்கு வந்த என் நண்பி தரையில் உள்ள கரை போகவில்லை என்று நான் புலம்ப, வினிகர் போட்டு பார் போய் விடும் என்று சொன்னார்கள். அப்படியே செய்தேன். சற்று ஊற வைத்து தேய்தேன்,கரை போய்விட்டது.

    அது போலவே, என் பிள்ளைகளுக்கு ஆஸ்துமா இருக்கிறது. வாஷிங் மிஷினில் ஸ்ஃப்ட்நர்/ Softener/souplineபோட்டால் அந்த வாசனை ஒத்துக்கொள்ளுவது இல்லை. அதற்க்கும் வெள்ளை வினிகர் தான் உபயோகியம்.

    அடுப்பு கழுவ,உங்கள் வீட்டு வெள்ளி,எவர்சில்வர் பாத்திரங்கள் கழுவ இது உபயோக படுத்தலாம்.

     தண்ணீர் சுட வைக்கும் கெட்டில்/  Electric kettle/bouilloire,எவர்சில்வர் ஏனத்தின் உள் பக்கதில் வெள்ளையாக இருந்தால், வெள்ளை வினிகரையும் தண்ணீரையும் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு கிழே ஊற்றி விட்டு கழுவுங்கள். அந்த வெள்ளை போய்விடும்.


    
      காய்கறிகளை வினிகர் கொண்டு கழுவலாம்.

     உங்கள் வீட்டு பாத் ரூம், டாய்லெட், தண்ணீர் குழாய்,வாஷ் பேசன்,கண்ணாடி ஜென்னல்,கண்ணாடி பொருட்கள் எல்லாம் வினிகர் கொண்டு கழுவலாம்.

     எதை கழுவ வேண்டும் என்றாலும் கொஞ்சம் நேரம் ஊற விட்டு கழுவ வேண்டும்.

     உங்கள் வீட்டு குளிர் சாதன பெட்டி துடைக்க இது போதுமே.

     இதில் எந்த கெமிக்கலும் இல்லை. அதனால், டொக்சிக் / Toxique/toxic இல்லை.

     இப்படி எவ்வளவோ எனக்கு வெள்ளை வினிகர் உபயோக பட்டுக்கொண்டு என்னுடன் பயணிக்கிறது.

     அதனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

         இது பலருக்கு தெரிந்த செய்தியாக இருக்கலாம். ஒரு சிலருக்கு தெரியாத செய்தியாக இருக்கலாம்.

     

தெரியாதவரிகளுக்கு இதை தெரிய படுத்திக்கொள்கிறேன்.

இன்னும் விவரம் வேண்டும் என்றால் எழுதுகிறேன்.
copyright©Mar2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts