தாய்மை அனுபவம் 16

என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது.

     9 மாதத்தில் இருந்து குழந்தை நனறாக உட்காரும். நாலுகாலிலும் நன்றாக நடக்கும். கால் முளைத்து விட்டது நாம் பெற்ற செல்ல குட்டிக்கு. சுட்டி தனங்கள் ஆரம்பித்து விட்டது. நமக்கு ஓட்ட பந்தயம் ஆரம்பித்து விட்டது.           குழந்தை பார்க்கும் பார்வையிலேயே அது என்ன செய்கிறது? என்ன சுட்டி தனம் செய்து மறைக்கிறது? என்று கண்டுபிடிக்கும் ஆற்றல் எல்லாம் வந்து விடவேண்டும்.திருட்டுதனம் ஆரம்பம்!!!!!.

     இந்த வயதில் இருந்தே நாம் கண்டிக்க வேண்டும்அதற்க்காக ஓவராக வேண்டாம்.

   இந்த வயதிலேயே புரிய வைத்து கண்டிக்க முடியும். சிலவற்றிற்க்கு புரிய வைக்க முடியாது. ஆசையாக கண்டிப்பது நல்லது.

    உதாரணத்திற்க்குபிள்ளை எப்பொழுது நாலுக்காலில் நடக்க ஆரம்பிக்கிறதோ, அப்பொழுதே, நெருப்பு சுடும் என்பதை நம்முடன் அடுப்பின் அருகில்  இருக்கும் போது, அவண் அருகில்  (மேல் அல்ல,அவண் வேலை செய்யும் போதும் அல்ல) சுடும். என்று கையை அருகில் வைத்து வைத்து எடுத்து விடவேண்டும்.
      இப்படித்தான் நான் என் பிள்ளைகளுக்கு  செய்தேன். இருந்தாலும் கவனமாக இருக்கவேண்டும். சொல்லிக்கொடுத்துவிட்டோம் என்று விடுவிடக்கூடாது.
     கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் எதையாவது செய்து விடுவார்கள். நாம் எதிர்பார்காத ஒன்றை. அதுதான் குழந்தைகள்.

விளையாட்டு விஷையம் என்று பார்க்கும் போது, இந்த வயதில் நீங்கள் வாங்கிக்கொடுக்க வேண்டுயது  soft toys   . ஏன் என்றால் இந்த வயதில் எல்லாவறையும் தூக்கி போட்டும் வயது. விளையாட்டு பொருளும் உடையும். அடுத்தவர் மண்டையும் உடையும். எதற்க்கு வீண் வேலை?  பிளாஸ்டிக் விளையாட்டு என்றால் அதுவும் கீறாமல் இருக்க வேண்டும்.
   
9 மாதம் வரை பிள்ளைகளுக்கு மிகவும் மென்மையான இசை,மென்மையான விளையாட்டு பொருட்கள் என்று வாங்கி கொடுக்க வேண்டும்.

இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் நிறைய ஓவ்வாமை இருப்பதால் சாப்பாடு விஷயத்தில் மாற்றங்கள் நிறைய வந்து இருக்கிறது.

6 மாதம் வரை குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்க வேண்டாம்.

1 வயது வரை சில பழ வகைகள் ( மாம்பழம்,கிவி,பப்பாளி,..)போன்றவைகளை கொடுக்க வேண்டாம்.

18 மாதம் வரை கோழிக்கறி வேண்டாம்.

ஒரு வயது வரை முட்டையின் வெள்ளைக்கரு வேண்டாம்.

8 மாதத்திலிருந்து முட்டையின் மஞ்சள் கருவை ஏதாவது ஒரு காய்கறியில் மசித்து கொடுக்கவும்.       

9 மாதத்திலிருந்து தயிர் கொடுக்கலாம்.

மீன் கொடுப்பதாயிருந்தாலும் 9 மாதத்திலிருந்து கொடுக்கலாம்.  
   
               குழந்தைகளுக்கான பிஸ்கெட்டுகள் 6 அல்லது 7 மாதத்திலிருந்து கொடுக்கலாம்.   
  
     உப்பு, சர்க்கரை சேர்க்க கூடாது.

 பிறகு பார்க்கலாம்       
copyright©Mar2014 kolly2wood.blogspot.com                                                                                     

Comments

Popular Posts