Hachis Parmentier/ஹஷிஷ் பர்மாதியே


   இது ஒரு பழைய காலத்து ரெசிபி. இந்த ரெசிபி எல்லா நாட்டிலும்  வேறு வேறு வித விதமாக செய்கிறார்கள்.

இது பிராஸில் செய்யும் ரெசிபி.

  இது மிச்சம் இருக்கும் உருளைக்கிழங்கு  ப்பூரே அல்லது கறியில் செய்யலாம்.

வேண்டிய பொருள்கள்

உருளைக்கிழங்கு ப்பூரே:
  • 1 கிலோ உருளைக்கிழங்கு
  • 500 லிட்டர் பால்
  • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
  • உப்பு
  • மிளகுத்தூள்

கறிக்கு:
  • கொத்துக்கறி  300 கிராம்
  • வெங்காயம்  2
  • தக்காளி 1/2
  • பூண்டு    2 பல்
  • மிளகுத்தூள்
  • உப்பு
  • துருவிய சீஸ்


நீங்கள் வேண்டுமானால் கறிமசாலாத்தூள்,மிளக்காய்த்தூள் போட்டுக்கொள்ளுங்கள்

செய்முறை:

உருளைக்கிழங்கு ப்பூரே:
1)உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

 2)உருளைக்கிழங்கின் தோலை உரித்துக்கொள்ளுங்கள்

நன்றாக மசித்துக்கொள்ளுங்கள்






3)பாலை பொங்க காய்த்துக்கொள்ளவும்.

 4)மசித்த உருளைகிழங்கில் உப்பு,மிளகுத்தூள் போட்டு மீண்டும் மசிக்கவும்.


5)சூடானா பாலை மசித்த உருளைக்கிழங்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிண்டவும்.





 6)சூடாக இருக்கும் போதே வெண்ணெய்யும் போடவும்.







  இப்பொழுது உருளைக்கிழங்கு ப்பூரே தயார்.

  ப்பூரே இப்படிதான் செய்ய வேண்டும் இதுதான் ருசியாக இருக்கும். பாக்கெட் ப்பூரே  நல்லா இருக்காது.

குழந்தைகளுக்கும் இப்படித்தான் செய்து கொடுக்க வேண்டும்.
6 மாததிலிருந்து 100 வயது வரை.

இப்பொழுது கொத்துக்கறி தயாரிக்கலாம்.

1)வெங்காயம் வெட்டி கொள்ளவும்.

2)தக்காளியும் வெட்டி கொள்ளவும்.

3)பூண்டையும் வெட்டி கொள்ளவும்

எல்லாவற்றையும் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

4)எல்லாம் வெட்டியதும்,சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் அல்லது வெண்ணெய் 100 கிராம் போட்டு வெங்காயம் வதக்கி,பூண்டு வதக்கி இரண்டும் வதங்கியதும்,தக்காளி போட்டு வதக்கவும்.



5)தக்காளி வதங்கியதும்.





கொத்துக்கறியை போட்டு வதக்கவும்.





6)கறி வதங்கியதும் அதனை தனியாக வைக்கவும்.





கறி தயார்.

7)அவணை190° முற்சூடு செய்துக்கொள்ளவும்.

8)அவணில் வைக்கும் தட்டில் முதலில் நாம் தயாரித்து வைத்திருக்கும் கொத்துக்கறியை போடவும்.







9)கொத்துக்கறியின் மேல் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ப்பூரேவை வைக்கவும்.








10)அதன் மேல் துருவிய சீஸை போட்டு விடவும்.





 11)அவணில் 15 லிருந்து 20 நிமிடம் வைக்கவும்.







விஜிடேரியானா நீங்கள்? அப்போ கொத்துகறிக்கு பதில் மீல் மேக்கரில் செய்யல்லாம்.



நல்லா இருக்கா?உங்களுக்குத்தான் சாப்பிடுங்க!
copyright©Mar2014.Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts