Poulet à la crème/ கோழியுடன் கீரிம்




இதற்க்கு தேவையானவை:
  • 1 முழுக்கோழி
  • 50 மில்லி ஆலிவ் எண்ணெய்
  • 50 கிராம் வெண்ணெய்
  • 500 கிராம்  கிரீம்
  • 20 சின்ன வெங்காயம்
  • 500 கிராம் மஷ்ரூம்
  • 4 பல் பூண்டு
  • அரை கப் சிக்கன் ஸ்டாக்
  • 100 மில்லி ஒயிட் ஒயின் (வேண்டும் என்றால்)
  • உப்பு
  • மிளகுத்தூள்
  • பார்ஸிலி இலை
  •  

செய்முறை:

1)கோழியை துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்.

2)மஷ்ரூமை சுத்தப்படுத்தி வெட்டி வைத்திக்கொள்ளவும்.

3)பூண்டை உரித்து,லேசாக தட்டி வைத்துக்கொள்ளவும்.

4)அடுப்பில் கசரோலை வைத்து, கொஞ்சமாக எண்ணெய்யும் வெண்ணெய்யுமாக போட்டு கோழியை லேசாக சிவக்க வைத்து,தனியாக எடுத்து வைக்கவும்.






5)அதே எண்ணெய்யில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.



வெங்காயம் வதங்கியவுடன்,மஷ்ரூமை போட்டு வதக்கவும்.





6)மஷ்ரூம் வதங்கியவுடன் சிவந்த கோழியை போடவும். பூண்டையும் போடவும் கிண்டி விடவும்.





7)ஒயினை ஊற்றவும். சிக்கன் ஸ்டாக்கையும் ஊற்றவும்.மீண்டும் கிண்டி விடவும்.

ஓயின் ஊற்ற உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் சிக்கன் ஸ்டாக் மட்டும்  ஊற்றி விட்டு விடுங்கள்.

8)உப்பு,மிளகுத்தூள் போட்டு சுண்ட விட்டு விடுங்கள். கோழியும் வேகட்டும்.

9)முக்கால் பாகம் வெந்ததும் கீரிமை ஊற்றவும். கிண்டி விடவும்.





10)கடைசியாக பார்ஸிலி இலை போடவும்.


கறி வெந்ததும் எடுத்து  சாப்பிடவும்.

இத்துடன் சோறு, உருளைக்கிழங்கு,பாஸ்தா நன்றாக இருக்கும்.



copyright©Mar 2014.Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts