Pain Savoyarade/ ஸவ்வோயார்த் ரொட்டி



கொஞ்சம் வருடங்களாக இங்கு ஸான்விச் கடைகளில் இது மாதிரி விதவிதமான ரொட்டிகள் விற்க தொடங்கியது. இதுவும் ஒரு வித சுவையுடன் தான் இருகிறது.

 இதற்க்கு தேவையான பொருள்கள்:

  • 1 ரோல் ரொட்டி
  • இல்லையென்றால் சாதாரண ரொட்டியில் கூட செய்யலாம்.
  • 100 கிராம் டபுள் கீரிம் /Sour cream/crème épaisse
  • 1/2 வெங்காயம்
  • 50 கிராம் பேகன்/bacon/lardon
  • 50 கிராம் மோஸ்ஸாரேலா  /Mozzarella


நீங்கள் பேகன் இதுவெல்லாம் போட பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. இந்த உருளைக்கிழங்கு இருக்கிறது அல்லவா? அதை வேகவைத்து, அதை வெட்டி போட்டுக்கொள்ளுங்கள்.

இது செய்வது சுலபம். செய்யும் நேரமும் குறைவு.

1)அவணை 180° முற்சூடு செய்யவும்.

2)ரொட்டியை நான் படத்தில் காட்டியுள்ளதுப்போல் அரிந்துக்கொள்ளுங்கள்.









3)கீரிமுடன் பார்ஸிலி இலை வெட்டி கலந்துக்கொள்ளுங்கள்.

4)வெட்டி வைத்துள்ள ரொட்டியில் கீரிமை தடவுங்கள்.







5)கீரிமின் மேல் வெட்டிய வெங்காயம் மற்றும் பேகனை வையுங்கள்.








6)அதன் மேல் மோஸ்ஸாரேலா சீஸ்ஸை வைக்கவும்.








7)முற்சூடு செய்த அவணில் 8 லிருந்து 10 நிமிடம் வைக்கவும்.


8)  சீஸ் உருக வேண்டும்அவ்வளவுதான்





 ரொம்ப நேரம் வைத்தால்
ரொட்டி ரஸ்க் ஆகி விடும். ஜாக்கிரதை.


சூடாக சாப்பிடாலாம்.
  பிள்ளைக்களுக்கு மத்திய உணவாகக்கூட கொடுத்து அனுப்பலாம்.
இது apertif,tiffin ஆகவும் சாப்பிடலாம்.


copyright©Mar2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts