Moule à la créme/ கீரிம் சாஸில் மட்டி/Mussels

    

 இங்கு கடலோர பகுதிகளில் மூல்/moules & ஃபீரித் /Frites/Finger Chips என்றால் மிகவும் பிரபலம். இது பெரியவர்கள் முதல் பிள்ளைகள் வரை விரும்பி சாப்பிடும் உணவு. பிள்ளைகளுக்கு எப்பொழுதும் பிடித்தும் ஃபீரித்தானே!

       இங்கு மூல்லை, அதுதான் நம்மூரில் மட்டி என்று சொல்லுவார்கள். அதனை ஓட்டுடன் நன்றாக கழுவி விட்டு செய்வார்கள்.

        இங்கு நான் கொடுத்து இருப்பது ஒட்டை எடுத்தது. உள்ளே இருக்கும் சதை பகுதி மட்டும்.

இப்பொழுது ரெசிபிக்கு வருவோம்.

வேண்டிய பொருட்கள்:

  • மட்டி/  Moules/M ussels  400 கிராம்
  • வெங்காயம் 1
  • பூண்டு 3 பல்
  • கீரிம் /Créme Fraîche/ Fresh cream  200 கிராம்
  • ஒயிட் ஒயின் 200 மில்லி
  • பிரிஞ்சி இலை 1
  • தையிம் இலை/thymn  1/4 தேக்கரண்டி
  • பார்ஸில் இலை/Persil  கொஞ்சம்
  • உப்பு,மிளகுத்தூள்


ஒயின் பிடிக்காதவர்கள் மஞ்சள்தூள் காரம் கொஞ்சம் தூக்கலாக பொட்டுக்கொள்ளுங்கள்.

இப்பொழுது தயாரிக்க தொடங்கலாம்:

1)வெங்காயத்தை பொடியாக அரிந்துக்கொள்ளுங்கள்.

2)பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

3)சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.

4)எண்ணெய் காய்ததும், வெங்காயத்தை போடவும். சிவக்க வைக்கவும்.





5)வெங்காயம் சிவந்ததும், மட்டியை போடவும்.







6)வெங்காயத்துடன் கிண்டி விடவும்.


7)ஒயினை ஊற்றவும்.





8)வாசனை இலைகளை போடவும்..

9)ஒயினில் இருக்கும் அல்கஹால் எல்லாம்  போனதும்,தீயை அடக்கவும்.
5 நிமிடம் வேகவிடவும்.


10)தீயை அடக்கியவுடன் கீரிமை போடவும்.









உப்பு குறைவாக போடவும்.

11)மீண்டும் தீயை அதிகப்படுத்தி நன்றாக கிண்டி விடவும். பார்ஸிலி இலையை போடவும்.




அடுப்பிலிருந்து இறக்கி சாப்பிடுங்கள். ஃபீரித்துடன்.



copyright©Mar 2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts